திருப்பூர்: ஈரோடு, கிருஷ்ணகிரி, கரூர், கோவையை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தில், கடந்த ஓராண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம், ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர்.ஏழை மக்கள் மருத்துவ சேவையை எளிதில் பெற, இலவச 108 ஆம்புலன்ஸ் திட்டம் 2008ல் கொண்டு வரப்பட்டது. தமிழகம் முழுவதும் 450க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் இயக்கப்படுகின்றன. மேற்கு மண்டலத்தில் 112 ஆம்புலன்ஸ் உள்ளது.
கடந்த 2012ல் மட்டும் ஈரோடு, கோவை, நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கரூர், நீலகிரி, சேலம் உள்ளிட்ட மேற்கு மண்டலத்தின் எட்டு மாவட்டங்களில், ஒரு லட்சத்து 10 ஆயிரம் பேர், அவசர உதவிக்காக 108 இலவச ஆம்புலன்ஸ்களை அழைத்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் விபத்துக்களில் சிக்கிய 6,170 பேர் மீட்கப்பட்டுள்ளனர். சேலம் 5,986; ஈரோடு 5,197; கிருஷ்ணகிரி 3,220; நாமக்கல் 3,158; தர்மபுரி 2,671; கரூர் 2,081; நீலகிரி 518 பேர். போதிய மருத்துவ வசதி இல்லாத, கிராமங்களை அதிக அளவில் உள்ளடக்கிய கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பிரசவ சிகிச்சைக்காக 5,188 பேர் மீட்கப்பட்டுள்னர். இதே மாவட்டத்தில் அதிகபட்சமாக 125 குழந்தைகள் ஆம்புலன்சில் பிறந்துள்ளன. சேலத்தில் 5,018 பேர், நீலகிரியில் 1,434 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.நெஞ்சுவலி, மாரடைப்பு, திடீர் வலிப்பு உள்ளிட்ட உயிரிழப்பு ஏற்படும் பிரச்னைகளில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு வருவதற்குள் காப்பாற்றியதில், கோவை முதலிடம் பெறுகிறது. கோவையில் மட்டும் 953 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில், முறையே 354, 678, 659 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.எட்டு மாவட்டங்களிலும், கடந்த ஓராண்டில் மட்டும் ஆம்புலன்சில் 533 குழந்தைகள் பிறந்துள்ளன. நெஞ்சுவலியால் மட்டும் 5,263 பேர் மீட்கப்பட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் குறைந்தபட்சம் 4,633 பேர் மட்டுமே, 108 ஆம்புலன்சை பயன்படுத்தியுள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.