E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
சிறுபாக்கத்தில் பிளஸ் 2 தேர்வு மையம் தேவை : 30 கி.மீ., பயணித்து தேர்வெழுதும் பரிதாபம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

09 ஜன
2013
23:51

சிறுபாக்கம் : சிறுபாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், புதிய பிளஸ் 2 தேர்வு மையம் ஏற்படுத்த வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாவட்டத்தின் கடைகோடி பகுதியிலுள்ள வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலுள்ள பிளஸ் 2 தேர்வு மையத்தில், சிறுபாக்கம், ம.புடையூர், ஐவதுகுடி, மங்களூர், அடரி, கழுதூர், பூலாம்பாடி உட்பட 15க்கும் மேற்பட்ட பகுதிகளிலுள்ள மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த பிளஸ் 2 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதி வருகின்றனர். மையத்தில், கடந்தாண்டு 800க்கும் மேற்பட்டோர் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதினர். நடப்பு ஆண்டில் 900க்கும் அதிகமானோர் தேர்வு எழுத உள்ளனர். கால விரயம் வேப்பூர் அருகே உள்ள பூலாம்பாடி, ஐவதுகுடி, கழுதூர், அடரி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் எவ்வித சிரமமுமின்றி வேப்பூர் மையம் வந்து தேர்வு எழுதி செல்கின்றனர். ஆனால், வேப்பூரிலிருந்து 20 முதல் 30 கி.மீ., தூரமுள்ள சிறுபாக்கம், மங்களூர், ஒரங்கூர், ம.புடையூர் பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் நீண்ட தூரம் பயணித்து தேர்வெழுத வேண்டியுள்ளது. இதனால் காலவிரயம் ஏற்படுவதுடன், குறிப்பிட்ட நேரத்திற்குள் தேர்வு மையம் வருவதற்கு பல இன்னல்களை சந்திக்கின்றனர். மாணவர்கள் அச்சம்
இப்பகுதியில் குறைவான பஸ்களே இயக்கப்படுவதால், குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டுமே வரும் பஸ்களை நம்பி காத்திருக்க வேண்டியுள்ளது. தேர்வு சமயத்தில் இரவில் வெகுநேரம் கண்விழித்து படிக்கும் மாணவ, மாணவிகள், அதிகாலையில் எழுந்து கிளம்பி காலை 7 மணிக்கே பஸ்சிற்காக காத்திருக்கும் அவலம் ஏற்படுகிறது. தேர்வு மையம் நீண்ட தூரமுள்ளதால் குறிப்பிட்ட நேரத்திற்குள் செல்ல முடியுமா என்ற அச்சத்தில், மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவதால், தேர்வில் மதிப்பெண் குறைய வாய்ப்புள்ளது. பெற்றோர் சிரமம் பஸ் வருமோ, வராதோ என்ற அச்சத்தில், பெரும்பாலான பெற்றோர்கள், தங்களது பணிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, இருகர வாகனங்களில் பிள்ளைகளை தேர்வு மையத்திற்கு அழைத்துச் சென்று, பலமணி நேரம் காத்திருந்து, தேர்வு முடிந்ததும் அழைத்து வருகின்றனர்.
மேலும், ஒவ்வொரு ஆண்டும் வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்திற்கு, பிளஸ் 2 தேர்வு எழுத அதிக மாணவர்கள் வருவதால், அவர்களுக்கு தேர்வு அறை ஒதுக்கீடு, இருக்கை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தர, தேர்வு மைய பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் மிகுந்த சிரமமம் அடைகின்றனர். கல்வித்துறை கவனிக்குமா?
எனவே, நீண்ட தூரத்திலிருந்து வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகள் நலன் கருதி, இத்தேர்வுமையத்தை இரண்டாக பிரித்து, சிறுபாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில் புதிதாக தேர்வு மையம் ஏற்படுத்த வேண்டும். அதில், அருகிலுள்ள மேல்நிலைப் பள்ளி பிளஸ் 2 மாணவர்களை இணைத்து தேர்வு எழுத அனுமதிப்பதற்கு, மாவட்ட கல்வித்துறை நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.