விருத்தாசலம் : பொங்கல் போனஸ் வழங்க கோரி, அரசு ஊழியர்கள் சார்பில் விருத்தாசலம், திட்டக்குடியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
அரசு
பணியாளர்களுக்கு ஒரு மாத ஊதியத்தை பொங்கல் போனசாக வழங்க வேண்டும். கருணை
தொகையை 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும் உட்பட பல கோரிக்கைகளை
வலியுறுத்தி, விருத்தாசலம் தாலுகா அலுவலகம் முன், தமிழ்நாடு அரசு பணியாளர்
சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் தங்கதுரை தலைமை
தாங்கினார். துணைத் தலைவர்கள் ஜெயக்குமார், அமிர்தலிங்கம் முன்னிலை
வகித்தனர். வட்டச் செயலர் சுப்ரமணியன் பங்கேற்றார்.
இதே கோரிக்கைகளை
வலியுறுத்தி, ஒன்றிய அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில்
நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்டச் செயலர் நாட்டுத்துரை தலைமை தாங்கினார்.
பொருளாளர்
கிருஷ்ணமூர்த்தி, வட்ட துணைத் தலைவர் கொளஞ்சியப்பன், சாலைப் பணியாளர்கள்
சங்கத் தலைவர் ஜோசப், முன்னாள் மாவட்ட துணைத் தலைவர் கோவிந்தராஜன் உட்பட
பலர் பங்கேற்றனர்.
திட்டக்குடி: தாலுகா அலுவலகம் முன், அரசு பணியாளர்
சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, வட்டச் செயலர் கருப்பையா தலைமை
தாங்கினார். மாநில துணைத் தலைவர் சீனிவாசன், தலைவர் பன்னீர்செல்வம்,
பொருளாளர் செல்லதுரை, நிர்வாகிகள் ஷேக்உமர், தனவேல், திருநாவுக்கரசு,
செல்வராசு, ராஜேந்திரன் பங்கேற்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.