புதுடில்லி: ஜார்க்கண்டில், சட்டசபையை முடக்கி வைத்து விட்டு, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும்படி, மத்திய அரசுக்கு, அம்மாநில கவர்னர் செய்து அகமது, பரிந்துரை செய்துள்ளார். ஜார்க்கண்ட்டில், அர்ஜுன் முண்டா தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடந்தது. அர்ஜுன் முண்டா அரசுக்கு, சிபுசோரனின், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி, ஆதரவு அளித்தது. ஏற்கனவே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி, முதல்வர் பதவியை தங்களுக்கு விட்டுத் தராததால், பா.ஜ., அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, வாபஸ் பெறுவதாக, ஜே.எம்.எம்., கட்சி அறிவித்தது. முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்த, அர்ஜுன் முண்டா, சட்டசபையை கலைக்கும்படி, கவர்னரிடம் அறிக்கை அளித்தார். இந்நிலையில், ஜார்க்கண்ட் சட்டசபையை கலைக்காமல், தற்காலிகமாக முடக்கி வைத்து, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும்படி, கவர்னர் செய்யது அகமது, மத்திய அரசுக்கு பரிந்துரை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து, மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டே கூறியதாவது: ஜார்க்கண்ட் கவர்னரிடம் இருந்து, முக்கிய அறிக்கை வந்துள்ளது. முடிவு எடுக்க, கால அவகாசம் தேவைப்படுகிறது. இவ்வாறு சுஷில் குமார் ஷிண்டே கூறினார். தற்போதுள்ள சூழ்நிலையில், ஜார்க்கண்ட் சட்டசபைக்கு இடைத் தேர்தல் வருவதை எந்த கட்சியுமே விரும்பவில்லை. இதனால், சட்டசபையை தற்காலிகமாக முடக்கி வைத்து, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த, மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு, எந்த நேரத்திலும் வெளியாகலாம்.
சிபுசோரன் முயற்சி இதற்கிடையே, காங்கிரஸ் ஆதவுடன் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகளை, ஜே.எம்.எம்., கட்சி முடுக்கி விட்டுள்ளது. அந்த கட்சியின் முக்கிய தலைவர்கள், டில்லியில், காங்., தலைவர் சோனியா உள்ளிட்ட தலைவர்களுடன், இதுகுறித்து பேச்சு நடத்தி வருகின்றனர். ஜார்க்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர்களும், இதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.