யாகதுருகம் : மூன்று
ஆண்டுகளாக இழுபறியாக பணிகள் நடந்து வந்த தியாகதுருகத்தில் இருந்து
மணலூர்பேட்டை செல்லும் சாலை (தஞ்சாவூரான் பாட்டை) 7.75 கோடி ரூபாய் செலவில்
அகலப்படுத்தும் பணிகள் நிறைவடைந்து விரைவில் பயன்பாட்டிற்கு
திறந்துவிடப்பட உள்ளது.
இதன் மூலம் திருச்சி, கள்ளக்குறிச்சியிலிருந்து
திருவண்ணாமலை செல்பவர்கள் போக்குவரத்து சிக்கல் இன்றி விரைவாக செல்ல தீர்வு
கிடைத்துள்ளது.
தியாகதுருகத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு மணலூர்
பேட்டை வழியே செல்ல சாலை உள்ளது. இது வரலாற்று சிறப்பு மிக்க சித்தூர் ராணி
அமைத்ததாகும். இது தஞ்சாவூரில் இருந்து சித்தூர்வரை செல்லும் சாலையில் ஒரு
பகுதியாகும்.
அரசர்கள் இவ்வழியே செல்லும்போது பாதுகாப்பு கருதியும்,
வழியில் தங்கும் இடமாகவும் தியாகதுருகம் மலையின் மீது கோட்டைகள் கட்டி,
ஆயுதங்களுடன் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
இதனால் இச்சாலை
"தஞ்சாவூரான் பாட்டை' என்று இன்று வரை அழைக்கப்பட்டு வருகிறது. இவ்வழியே
திருவண்ணாமலைக்கு எளிதில் செல்லமுடியும். இச்சாலை பல ஆண்டுகளாக
பராமரிக்கப்படாமல் குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்துக்கு பயனற்று
இருந்தது. இதுகுறித்து தினமலரில் செய்தி வெளியானதை தொடர்ந்து வடதொரசலூர்
கூட்டுரோட்டில் இருந்து மணலூர் பேட்டை வரை 26 கி.மீட்டர் நீளம் சாலை
அகலப்படுத்தி செப்பனிட கடந்த 2009ம் ஆண்டு 5.25 கோடி ரூபாய் நிதி
ஒதுக்கப்பட்டது.
நெடுஞ்சாலைத்துறையின் மூலம் தனியாருக்கு டெண்டர் விட்டு
மூன்றே முக்கால் மீட்டர் அகலமிருந்த சாலை 5.5 மீட்டர் அகலத்திற்கு பணிகள்
மேற்கொள்ளப்பட்டது. டெண்டர் எடுத்தவரின் மெத்தனத்தால் பணிகள் அரைகுறையாக
நிறுத்தப்பட்டது.
அதையடுத்து மீண்டும் தினமலர் நாளிதழில் செய்தி வெளியிட்டு சுட்டிக்காட்டியதை
யடுத்து
பணி விரைவுபடுத்தப்பட்டது. மேலும் 7 மீட்டர் அகலத்திற்கு சாலை அமைக்க
கூடுதலாக 2.5 கோடி ரூபாய் நிதி கடந்த ஆண்டு ஒதுக்கீடு செய்யப்பட்டது.
நெடுஞ்சாலைத்துறையினர்
விரைந்து பணி மேற்கொண்டனர். சிறுபாலங்களின் அகலத்தை அதிகரித்து பணிகள்
நடந்தது. தற்போது தேனூர் அருகில் உள்ள பாலம் தவிர்த்து அனைத்து பணிகளும்
நிறைவடைந்துள்ளதால் விரைவில் போக்குவரத்துக்கு திறந்துவிடப்படும் என
அதிகாரிகள் தெரிவித்தனர்.
தியாகதுருகத்தில் இருந்து திருவண்ணாமலை வரை 55
கி.மீ., தூரம் இச்சாலை தரமானதாக தற்போது அமைக்கப்பட்டுள்ளது. வளைவுகள்
இன்றியும், போக்குவரத்து நெரிசல் இன்றி, பாதுகாப்பாக குறைந்த நேரத்தில்
கள்ளக்குறிச்சியில் இருந்து திருவண்ணாமலை சென்றுவிட முடியும்.
திருச்சியில்
இருந்து வருபவர்கள் வேப்பூரில் இருந்து கள்ளக்குறிச்சி சாலை வழியே சென்று
விருகாவூர் அருகே தியாகதுருகம் சாலை வழியாக திருவண்ணாமலை விரைவாக
செல்லலாம்.
"தஞ்சாவூரான் பாட்டை' என்று அழைக்கப்படும் சாலை அகலப்படுத்தி செப்பனிடப்பட்டுள்ளதால் பலரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
தியாகதுருகம்
- மணலூர்பேட்டை சாலை புதுப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது தியாகதுருகத்தில்
இருந்து திருவண்ணாமலைக்கு ஒரு பஸ் மட்டுமே இயக்கப்பட்டு வருகிறது. இதனை
அதிகரிக்கவும், பவுர்ணமி தினங்களில் கிரிவலத்திற்கு செல்லும் பக்தர்களின்
வசதிக்காக கூடுதலாக சிறப்பு பஸ்களை இவ்வழியாக இயக்கவும் அரசு போக்குவரத்து
கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.