ஐதராபாத்: அடுத்தாண்டு வர உள்ள, சட்டசபை தேர்தலை கருத்தில் கொண்டு, ஆந்திராவில், தெலுங்கு தேச கட்சித் தலைவர் சந்திர பாபு நாயுடு, பாத யாத்திரை செய்து வருகிறார். ஆந்திராவில், 2014ல் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதை கருத்தில் கொண்டு, முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசக் கட்சித் தலைவருமான, சந்திரபாபு நாயுடு, பாத யாத்திரை செய்து வருகிறார். கடந்தாண்டு, அக்டோபர், 2ம் தேதி, காந்தி பிறந்த தினத்தில், "உங்களுக்காக நான் வருகிறேன்' என்ற கோஷத்துடன், பாத யாத்திரையை துவக்கினார். வரும், 26ம் தேதி, குடியரசு தினத்தில், யாத்திரையை முடிக்க திட்டமிட்டுள்ளார். இதுவரை, 1,587 கி.மீ., தூரத்திற்கு, ஒன்பது மாவட்டங்களில், 41 சட்டசபை தொகுதிகளிலுள்ள, 702 கிராமங்களுக்குச் சென்று, பொதுமக்களை சந்தித்தார். இன்னும், 14 மாவட்டங்களில், 253 தொகுதிகளில், பாத யாத்திரை மேற்கொள்ள வேண்டும். ஆந்திராவில், ஜகன்மோகன் ரெட்டியின், ஒய்.எஸ்.ஆர்., காங்கிரசின் மவுசு கூடியுள்ள நிலையில், அதன் வெற்றியை முறியடிக்க, நாயுடு, கிராமம் கிராமமாகச் சென்று வருகிறார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.