இந்தூர்: ம.பி., மாநிலம், இந்தூரில் உள்ள, ஆர்.எஸ்.எஸ்., அலுவலகம் மீது தாக்குதல் நடத்திய, காங்கிரஸ் மாணவர் பிரிவை சேர்ந்த, ஏழு தொண்டர்கள், கைது செய்யப்பட்டனர். டில்லி கற்பழிப்பு சம்பவம் தொடர்பாக, ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பாகவத் கருத்து தெரிவிக்கையில், "கற்பழிப்புகள் அதிகம் நகரங்களில் தான் டக்கிறது. நகரங்களில் வசிக்கும் பெண்கள், மேற்கத்திய கலாசாரங்களை பின்பற்றுகின்றனர். இதனால் தான், நகரங்களில், பெண்களுக்கு எதிரான, குற்றங்கள் அதிகரிக்கின்றன' என குறிப்பிட்டு இருந்தார். இவரை தொடர்ந்து மத்திய பிரதேச அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியாவும், கருத்து தெரிவித்து இருந்தார். இதை கண்டித்து, ம.பி. மாநில காங்கிரஸ் கட்சியின் மாணவர் அணியினர், நேற்று இந்தூரில் உள்ள, ஆர்.எஸ்.எஸ்., அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கல்வீசி தாக்குதல் நடத்தினர். இதில், ஜன்னல் கண்ணாடிகள், பூந்தொட்டிகள் சேதம் அடைந்தன. இச் சம்பவம் தொடர்பாக, மாணவர் காங்கிரசை சேர்ந்த, ஏழு பேர், கைது செய்யப்பட்டனர். இதற்கு பதிலடியாக, ஆர்.எஸ். எஸ்., தொண்டர்கள், காங்கிரஸ் கட்சி தலைவர்களின் வீடுகள் மீது, கல்வீசி தாக்குதல் நடத்தினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.