மும்பை: மும்பை மாநகராட்சி கூட்டங்களில், மொபைல் போன் ஒலித்தால், மொபைல் போனை பறிமுதல் செய்கிறார், மேயர். இது வரை பலர், தங்களின் மொபைல் போன்களை பறிகொடுத்துள்ளனர். தகவல் தொடர்புக்கு அருமையான சாதனமான, மொபைல் போன்கள், பல நேரங்களில், பலருக்கு எரிச்சல் ஏற்படுத்தும் கருவியாக அமைந்து விடுகிறது. நேரம், காலம் இல்லாமல், எந்நேரமும் சிலரின் மொபைல்கள் ஒலிப்பதால், அருகில் இருப்பவர்களுக்கு தர்மசங்கடமாகி விடுகிறது. மும்பை மாநகராட்சி கூட்டங்களில், 227 உறுப்பினர்கள் உள்ளனர். சிவசேனா கட்சியை சேர்ந்த, மேயர் சுனில் பிரபு, உறுப்பினர்களுடன், முக்கிய விவாதங்களில் ஈடுபட்டிருக்கும் போது, கூட்ட அறையில், மொபைல் போன் ஒலிப்பது, பெரும் இடையூறாக இருந்தது. சபையில் மொபைல் போன்களை, "சுவிட்ச் ஆப்' செய்து வையுங்கள் என பல முறை, மேயர் கேட்டு கொண்ட பிறகும், உறுப்பினர்கள் தங்கள் மொபைல் போன்களை, "சுவிட்ச் ஆப்' செய்வதில்லை. மொபைல் போன்களை செயல் இழக்க செய்யும், ஜாமர் கருவிகளை பொருத்தி பார்த்தும் பயனில்லை. சில சமயங்களில் மட்டுமே, அந்த கருவிகள் வேலை பார்த்ததால், சபையில், மொபைல் போன் ஒலியை கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், "சபையில் யாருடைய மொபைல் போன் ஒலித்தாலும், பறிமுதல் செய்யப்படும்' என, மேயர், சுனில் பிரபு அறிவித்தார். இரண்டாண்டுகளுக்கு முன், காங்கிரஸ் உறுப்பினர்கள் இருவரின் மொபைல் போன்களை பறிமுதல் செய்த மேயர், கடைசி வரை அவற்றை கொடுக்கவே இல்லை. அதற்கு பிறகு, மாநகராட்சி கூட்டத்தில், மொபைல் போன்கள் ஒலிப்பதே இல்லை. அவ்வப்போது, தவறுதலாக, உறுப்பினர்கள் அல்லது அதிகாரிகளின் மொபைல் போன் ஒலித்தாலும், ஒரு ரிங் வரும் போதே, அவர்கள் பதறியபடி, அவற்றை அணைத்து விடுவது வாடிக்கை. இரண்டு நாட்களுக்கு முன், மாநகராட்சியின் ஆண்டு கூட்டம் நடந்து கொண்டிருந்த போது, சிவசேனா உறுப்பினர், திலிப் தாண்டேயின் மொபைல் போன் ஒலித்ததால், கோபம் அடைந்த மேயர், அந்த போனை பறிமுதல் செய்ய உத்தரவிட்டார். இதற்கு உறுப்பினர்கள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பினாலும், மேயர் தன் முடிவில் உறுதியாக இருந்ததால், மாநகராட்சி கூட்டங்களில், மொபைல் போன்கள் சத்தம் கேட்பதே இல்லை.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.