Advertisement
'குற்றப்பின்னணியுடைய அரசியல்வாதிகள் பதவி விலக வேண்டும்' ஓய்வுபெற்ற அதிகாரிகள், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2013,00:04 IST

புதுடில்லி: குற்றப் பின்னணியில், குறிப்பாக, பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., மற்றும் ராணுவ அதிகாரிகள், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர். டில்லியில், மருத்துவ மாணவி, ஓடும் பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்திற்கு, நாடு முழுவதும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு, குற்றவாளிகளுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்த சூழலில், குற்றப் பின்னணியுடைய எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் அரசியல் கட்சி பிரமுகர்கள் ஆகியோர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என, முத்த குடிமக்கள் குழு என்ற அமைப்பை சேர்ந்த, ஓய்வு பெற்ற அதிகாரிகள், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் கேட்டுக் கொண்டுள்ளனர். இது தொடர்பாக, முன்னாள் ராணுவத் தளபதி அட்மிரல் எல்.ராமதாஸ் மற்றும் ஜெனரல் வி.கே.சிங் ஆகியோர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: குற்றப் பின்னணியுடைய அரசியல்வாதிகளை, தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என்ற, தேர்தல் கமிஷனின் நீண்ட கால பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டும். இதுபோன்ற அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படுவதன் மூலம், நம் நாட்டின் மதிப்பு காப்பாற்றப்படும். அதுபோல், டில்லி போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ள நீரஜ் குமார், பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும். இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகாரிகள்
இக்கடிதத்தில், முன்னாள் சி.பி.ஐ., இயக்குனர் நரசிம்மன் (ஐ.பி.எஸ்.,) மற்றும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், தேவசகாயம், ராகவன், அம்புரோஸ், சிவராமன், அருண்குமார், ராமன், ராஜீவன் கிருஷ்ணசாமி மற்றும் லெப்டினண்ட் ஜெனரல் பிரகாஷ் கடோச், மேஜர் ஜெனரல் வர்மா, பிரிகேடியர் மகாலிங்கம் மற்றும் கர்னல் கரண் கார்ப், மல்லப்பன் ஆகியோரும் கையெழுத்திட்டுள்ளனர்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.