Bihar becomes land of Cuckoo | பீகாரின் மாநில பறவையாகிறது சிட்டுக்குருவி| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பீகாரின் மாநில பறவையாகிறது சிட்டுக்குருவி

Added : ஜன 10, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
பீகாரின் மாநில பறவையாகிறது சிட்டுக்குருவி

பாட்னா: பீகார் மாநிலத்தின் பறவையாக, சிட்டுக்குருவி அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, பீகார் அரசு வட்டாரங்கள் கூறியதாவது: பீகாரில், மாநில வன விலங்குகள் பாதுகாப்பு கவுன்சில் குழு கூட்டம், முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. அப்போது, சிட்டுக்குருவிகள் வேகமாக அழிந்து வருவதற்கு கவலை தெரிவித்த நிதிஷ்குமார், சிட்டுக்குருவிகள், மனிதர்களை சார்ந்துள்ள பறவை; இதை காடுகளில் காணமுடியாது. எனவே, சிட்டுக்குருவி இனத்தை பாதுகாப்பதில் முக்கிய கவனம் செலுத்தப்பட வேண்டும். அதிகரித்து வரும் மக்கள் தொகை, மொபைல் போன் கோபுரங்கள், உணவு தானியங்களில் அதிகப்படியாக பயன்படுத்தப்படும் பூச்சி மருந்துகள் போன்ற காரணங்களால்தான், சிட்டுக்குருவி இனம் அழியும் நிலை ஏற்பட்டு உள்ளது. சிட்டுக்குருவிகளை பாதுகாப்பது தொடர்பாக, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். சிட்டுக்குருவி இனத்தை காக்கும் வகையில், அதை பீகார் மாநில பறவையாக மாநில அரசு விரைவில் அறிவிக்கும் என, பேசினார். இவ்வாறு, வட்டாரங்களில் கூறியுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை