புதுடில்லி: வனப் பகுதியை ஒட்டி ரயில் பாதைகளில், யானைகள் ரயிலில் அடிபட்டு உயிர் இழக்கும் சம்பவங்கள், சமீப நாட்களாக அதிகரித்து உள்ளன. இதையடுத்து, யானைகள் உடலில் மின்னணு தகடு பொருத்தவும், வனத்துறை அதிகாரிகளை, ரயில்வே கட்டுப்பாட்டு அறையில் பணியமர்த்தவும், முடிவு செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில், ஒடிஷா மற்றும் மேற்கு வங்கத்தில், வனத்தை ஒட்டியுள்ள ரயில் பாதைகளில், யானைகள் மோதி விபத்துக்குள்ளாவது அதிகரித்து உள்ளது. கடந்த மாதம், ஒடிஷாவில் நடந்த விபத்தில், ஆறு யானைகள் பலியாயின. இதனால், ரயில் போக்கு வரத்தும் பாதிக்கப்பட்டது. "வனப் பகுதிகளில் இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை குறைக்க வேண்டும்' என, சுற்றுச்சூழல் அமைச்சகம், ரயில்வே அமைச்சகத்திடம் முறையிட்டது. யானைகள் உயிர் இழக்கும் சம்பவம், கவலையளிப்பதாக உள்ளது என, எம்.பி.,க்கள் சிலரும், பார்லிமென்ட்டில் கவலை தெரிவித்தனர். இந்நிலையில், வனத்தை ஒட்டியுள்ள ரயில் பாதைகளில், யானைகள் நடமாட்டத்தை அறிந்து கொள்ளும் வகையில், யானைகளுக்கு மின்னணு தகடு பொருத்த, சுற்றுச்சூழல் அமைச்சகம் முடிவு செய்துள்ளது. யானைகள் உடலில் மின்னணு தகடு பொருத்தப்பட்டால், அதன் மூலம், நடமாட்டத்தை கண்காணித்து, ரயில்வே அதிகாரிகளுக்கு தெரிவித்து, ரயில் டிரைவர்களுக்கு எச்சரிக்கை கொடுத்து, விபத்துகளை தடுக்கலாம். மேலும், இதற்காக யானைகள் நடமாட்டம் உள்ள வனப் பகுதிகளை கண்டறிந்து, அங்குள்ள ரயில்வே கட்டுப்பாட்டு அறைகளில், அதிகாரிகளை நியமிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.