புதுடில்லி: டில்லியில் நடந்த பாலியல் பலாத்கார சம்பவத்தை தொடர்ந்து, பெண்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அதிரடி நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
"பள்ளி பஸ்களின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் பற்றிய விவரங்களை, போலீசாரிடம் அளிக்க வேண்டும். அந்த விவரங்களை அளிக்காத பஸ்களை இயக்க, அனுமதி அளிக்கப்படாது' என்றும், டில்லி மாநில அரசு கூறியுள்ளது.
கமிஷனர் ஆலோசனை
டில்லியில், பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான, மருத்துவ கல்லூரி மாணவி, உயிரிழந்தார். இதையடுத்து, "பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, டில்லி மாநில அரசு போதிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தி, டில்லியில் பெரிய அளவில் போராட்டங்கள் நடந்தன. இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக, டில்லி கவர்னர் தேஜிந்தர் கன்னா, முதல்வர் ஷீலா தீட்ஷித், போலீஸ் கமிஷனர் நீரஜ் குமார் ஆகியோர், நேற்று ஆலோசனை நடத்தினர். டில்லி போலீஸ் துறை, மத்திய உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் வருவதால், மத்திய உள்துறை அமைச்சர் சுஷில் குமார் ஷிண்டேயும், அதிகாரிகளுடன், இதுகுறித்து தனியாக ஆலோசனை நடத்தினார். சுஷில் குமார் ஷிண்டே கூறியதாவது: டில்லியில், பெண்கள், குழந்தைகள், சாதாரண மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வது குறித்து, ஆலோசிக்கப்பட்டது. இதில், பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளின் விசாரணையை விரைவு படுத்தும்படி, போலீசாருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெண்கள் கொடுக்கும் புகார்களின் அடிப்படையில், உடனடியாக, எப்.ஐ.ஆர்., பதிவு செய்யும்படி, போலீசாருக்கு ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில், கவனக்குறைவாக செயல்படும் போலீசார், சஸ்பெண்ட் செய்யப்படுவர். இவ்வாறு சுஷில் குமார் ஷிண்டே கூறினார்.
கட்டுப்பாடு
இதுகுறித்து டில்லி மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: டில்லியில் உள்ள, அனைத்து பள்ளி பஸ்களின் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் பற்றிய விவரங்கள், போலீசாருக்கு முன் கூட்டியே அளிக்கப்பட வேண்டும். ஓட்டுனர் மற்றும் நடத்துனரின் விவரங்களை கொடுக்காத, பள்ளி பஸ்களை இயக்க, அனுமதி அளிக்கப்படாது.இதுதவிர, 24 மணி நேரமும், சிறப்பு போலீஸ் படை, கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளும். உதவி தேவைப்படும் இடங்களுக்கு, போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களை உடனடியாக அனுப்பி வைப்பதற்கும், நடவடிக்கை எடுக்கப்படும் டில்லியில் உள்ள நட்சத்திர ஓட்டல்களில் செயல்படும் டிஸ்கோ கிளப்புகளை, இரவு, 1:00 மணிக்குள், கட்டாயமாக மூடி விட வேண்டும். உதவி மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களிலும், குறைந்தது ஒரு பெண் அதிகாரியாவது, பணியமர்த்தப்படுவர்.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.