ஐதராபாத்: "" பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோரை, தற்காப்புக்காக, கொலை செய்தால் கூட, தப்பில்லை,'' என, ஆந்திர மாநில டி.ஜி.பி., தினேஷ் ரெட்டி கூறினார். டில்லியில், மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யபட்ட சம்பவத்தை அடுத்து, பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுப்பதில், ஆந்திர மாநில அரசு, தீவிரம் காட்டி வருகிறது. ஐதராபாத்தில் செயல்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில், இரண்டு லட்சம் பேர், பணியாற்றுகின்றனர். இதில், பெண்களும், கணிசமான அளவில் உள்ளனர். இவர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்வதற்தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் பெண்களுடனான, கலந்துரையாடலுக்கு, ஆந்திர மாநில போலீசார் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், ஆந்திர மாநில டி.ஜி.பி., தினேஷ் ரெட்டி கூறியதாவது: கேலி செய்வது தான், பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கான துவக்கமாக உள்ளது. அடிப்படையிலேயே, இதுபோன்ற விஷயங்களை கட்டுப்படுத்தி விட்டால், பெரிய குற்றங்கள் நடக்காமல் தடுத்து விடலாம். பெண்களை கிண்டல் செய்வோருக்கு, அதிக தண்டனை வழங்குவதன் மூலம், இந்த பிரச்னைக்கு தீர்வு காணலாம். பெண்கள், தங்களை பாலியல் பலாத்காரத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக, பலாத்காரத்தில் ஈடுபடுவோரை கொலை செய்தாலும், தப்பில்லை. இதுபோன்ற வழக்குகளில், பெண்களுக்கு கருணை காட்டப்படும். ஐதராபாத்தில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு, முன்னுரிமை அளிக்கப்படும். நகரின் முக்கியமான இடங்களில், 47 ரகசிய கண்காணிப்பு கேமராக்களை பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு வாரத்துக்குள், இந்த கேமராக்கள் பொருத்தப்படும். படிப்படியாக, ஐதராபாத் முழுவதும், 2,500 கேமராக்களை நிறுவ, முடிவு செய்துள்ளோம். இரவு நேரங்களில், அலுவலகத்திலிருந்து வீட்டுக்கு திரும்பும் பெண்களுக்காக, சிறப்பு உதவி மையங்கள் அமைக்கப்படவுள்ளன. இதன்படி, அலுவலகம் முடிந்து, வாடகை காரிலோ, ஆட்டோவிலோ, வீடு திரும்பும் பெண்கள், தாங்கள் பயணிக்கும் வாகனத்தின் பதிவெண்ணை, உதவி மையத்திடம் தெரிவித்தால், அந்த வாகனத்தின் நடமாட்டம், ஜி.பி.எஸ்., தொழில்நுட்பம் மூலம், போலீசாரால் கண்காணிக்கப்படும். அடுத்த சில மாதங்களில், இந்த உதவி மையங்கள் செயல்படத் துவங்கும். இவ்வாறு தினேஷ் ரெட்டி கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.