புதுடில்லி: பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணங்களை, குறிப்பிட்ட கால இடைவெளியில் ஆய்வு செய்து, அரசுக்கு ஆலோசனை வழங்க, ரயில் கட்டண ஆணையத்தை அமைக்க, ரயில்வே துறை முடிவு செய்துள்ளதாக, மத்திய ரயில்வே அமைச்சர் பவன்குமார் பன்சால் தெரிவித்துள்ளார். டில்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: ரயில் பயணிகள் கட்டணம் மற்றும் சரக்கு கட்டணம் ஆகியவற்றை, குறிப்பிட்ட கால இடைவெளிகளில் ஆய்வு செய்து, அரசிற்கு தேவையான ஆலோசனை வழங்குவதற்காக, ரயில் கட்டண ஆணையம் அமைக்கப்படவுள்ளது. வரும், ரயில்வே பட்ஜெட்டில் இது குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டு, மத்திய அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும். அத்துடன், டீசல் மற்றும் மின்சார செலவுகள் ஆகியவற்றை உள்ளடங்கிய செயலாக்க செலவுகள் போன்றவற்றையும் ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிப்பது தான் இந்த ஆணையத்தின் முக்கியப்பணி. இவ்வாறு பவன்குமார் பன்சால் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.