சமையல் காஸ் சிலிண்டர் விலையை ரூ.100 உயர்த்த மத்திய அரசு முடிவு
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: மானிய விலையில் அளிக்கப்படும் சமையல் காஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை, ஆறிலிருந்து, ஒன்பதாக அதிகரிக்க திட்டமிட்டுள்ள மத்திய அரசு, இதனால் ஏற்படும் இழப்பை ஈடு செய்யும் வகையில், மானிய விலை காஸ் சிலிண்டரின் விலையை, 100 ரூபாய் அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளதாக, தகவல் வெளியாகியுள்ளது.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்ததாலும், மத்திய அரசுக்கு நிதி பற்றாக்குறை ஏற்பட்டதாலும், பொதுமக்களுக்கு வழங்கப்படும் மானியங்களை குறைக்க, மத்திய அரசு முடிவு செய்தது. இதன்படி, மானிய விலையில் வழங்கப்படும் காஸ் சிலிண்டர்களின் எண்ணிக்கையை, ஆண்டுக்கு, ஆறாக குறைத்து, மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.
இதற்கு, பொதுமக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு ஏற்பட்டது. மானியமில்லாத சிலிண்டருக்கு, 900 ரூபாய் வரை கொடுக்க வேண்டியிருப்பதால், நடுத்தர குடும்ப மக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், மானிய விலை சிலிண்டர் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், மத்திய பெட்ரோலிய அமைச்சகம், இது தொடர்பாக, சில முக்கிய யோசனைகளை மத்திய அமைச்சரவையின் பரிசீலனைக்கு அனுப்பியுள்ளது.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மானிய விலை சிலிண்டர்களின் எண்ணிக்கையை, ஆறிலிருந்து ஒன்பதாக அதிகரித்து, அறிவிப்பு வெளியிடலாம். இதனால், பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு, கடும் நிதி இழப்பு ஏற்படும். இதை ஈடுகட்டுவதற்காக, மானிய விலை சிலிண்டரின் விலையை, 100 ரூபாய் வரை அதிகரிக்கலாம். இரண்டு தவணைகளில், இந்த விலை உயர்வை செயல்படுத்தலாம். இது, இந்த நிதியாண்டுக்கான விலை உயர்வு.
அடுத்த நிதியாண்டிலிருந்து, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை, காஸ் சிலிண்டரின் விலையை, 50 ரூபாய் உயர்த்தலாம். எண்ணெய் நிறுவனங்களின் இழப்பை ஈடு செய்யும் வரை, இந்த விலை உயர்வை தொடரலாம்.
டீசல் விலையும்
டீசல் விலையை, வரும் மார்ச் மாதத்துக்குள், லிட்டருக்கு, 4.50 ரூபாய் வரை உயர்த்தலாம். இந்த விலை உயர்வை, ஒரே தவணையில் உயர்த்தலாம் அல்லது மாதம் தோறும், 1.50 ரூபாய் உயர்த்தலாம். அடுத்த நிதியாண்டு துவக்கமான, ஏப்ரல் முதல், இழப்பை ஈடு செய்யும் வரை, மாதம் தோறும், 1 ரூபாய் வரை உயர்த்தலாம். மண்ணெண்ணெய் விலையை, இந்த நிதியாண்டு இறுதிக்குள், மாதம் தோறும், 35 பைசா வரை, உயர்த்தலாம்.
இவ்வாறு பெட்ரோலிய அமைச்சகம், மத்திய அமைச்சரவைக்கு யோசனை தெரிவித்துள்ளது. ஆனாலும், இது தொடர்பாக, மத்திய அமைச்சரவை பரிசீலித்த பின்பே, இறுதி முடிவு எடுக்கப்படும் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

AdvertisementAdvertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
naagai jagathratchagan - mayiladuthurai ,இந்தியா
10-ஜன-201306:11:48 IST Report Abuse
naagai jagathratchagan இலவசம், வாங்கிய கடனை தள்ளுபடி செய்தல் ..தொலை நோக்கு சிந்தனை இல்லாத செயல்பாடு ....வளர்ச்சிக்கான வழிமுறை இல்லாத அரசியல் சேவை ...நினைத்தபோதெல்லாம் வரி என்ற பெயரால் மக்களை வதைத்தல் நூறு நாள் வேலை என்ற பெயரால் உண்மையில் நடப்பது என்ன என்று தெரியாமல் பணத்தை அழிப்பது ....இவைகளை மத்தியில் உள்ள சிறுபான்மை காங்கிரஸ் அரசு சிந்தித்து செயல்படவேண்டும்
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
10-ஜன-201306:07:38 IST Report Abuse
villupuram jeevithan எதையும் பாசிடிவ்வாக எடுத்துக் கொள்ள வேண்டுமல்லவா? நூறு ரூபாய் ஏறுகிறதே என்று நினைக்காமல் ஒன்பது சிலிண்டர் கிடைக்கிறதே என்று மகிழ்ச்சி அடைய வேண்டும் என்று சொல்லுபவர்களும் இருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
jayabalan - chennai ,இந்தியா
10-ஜன-201306:05:56 IST Report Abuse
jayabalan உலக்கைக்குப் பயந்து உரலில் தலைவைத்த கதைதான். இருந்தாலும் அதி புத்திசாலித் தனமாய் மாற்றிவிட்டு மாட்டிக்கொண்ட தமிழகம் என்ன செய்யப் போகிறதாம்?
Rate this:
Share this comment
Cancel
KALPATHY VASUDEVA IYER NARAYANAN - Chennai,இந்தியா
10-ஜன-201306:01:23 IST Report Abuse
KALPATHY VASUDEVA IYER NARAYANAN to overcome the financial difficulties remove pension to all, fix a consolidate daily amount to elected representatives and financial advisers. . . remove free accommodation to these people. Why surcharge /service tax? remove this.
Rate this:
Share this comment
Cancel
Anniyan Bala - Chennai,இந்தியா
10-ஜன-201305:20:13 IST Report Abuse
Anniyan Bala நடுத்தர மக்களின் பாடு திண்டாட்டம்தான். அரசுக்கு இழப்பா? டேய் இதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்ல. அரசுக்கு இழப்பு ஏற்படாமல் இருக்க பொதுமக்களின் அன்றாட தேவைகளில் கை வைப்பது அடடா என்ன ஒரு புத்திசாலித்தனமான முடிவு. கச்சா எண்ணை உயரும் போது டீஸல், பெட்ரோல் மற்றும் சிலிண்டெர் விலை உயர்த்துவது போல் குறையும் போது விலை குறைப்பு செய்கிறார்களா? இல்லையே. நாங்க மட்டும் தான் வரி கட்டணுமா மாத வருமானத்திற்கு? ஏன் அமைச்சர் பெருமக்களுக்கு மட்டும் வரி விலக்கு? இவர்களின் மாத வருமானத்தில் வரி பிடிப்பு செய்து அரசுக்கு ஏற்படும் இழப்பை சரி செய்யலாம். எல்லாவற்றிக்கும் எங்க தலையில் மத்தளம் வாசிக்க வேண்டாம். காங்கிரஸ்கு சங்கு தான் 2014 தேர்தல். வாங்கடி மாப்ளைகளா 2014 ஆப்பு வெக்க பொதுமக்கள் ஆகிய நாங்கள் ஆவலாக இருக்கிறோம்.
Rate this:
Share this comment
Cancel
villupuram jeevithan - villupuram,இந்தியா
10-ஜன-201305:16:11 IST Report Abuse
villupuram jeevithan பால் விலை உயர்வு, மின்சாரக் கட்டணம் உயர்வு, பஸ் கட்டணம் உயர்வு போன்றவற்றை பார்க்கும் போது, இதெல்லாம் உயர்வே இல்லை
Rate this:
Share this comment
Cancel
s.maria alphonse pandian - CHENNAI-88,இந்தியா
10-ஜன-201304:46:55 IST Report Abuse
s.maria alphonse pandian மான்ய விலையில் கொடுக்கப்படும் சிலிண்டர்களின் எண்ணிக்கையை ஒன்பதாக உயர்த்த வேண்டுமென கலைஞர் குடுத்திருந்த கோரிக்கை என்ன ஆயிற்று?அதை முதலில் நிறைவேற்றுங்கள்....
Rate this:
Share this comment
Cancel
Global Citizen - சென்னை,இந்தியா
10-ஜன-201301:19:04 IST Report Abuse
Global Citizen எதுக்குஇந்த மானங்கெட்ட பொழப்பு... பொருளாதாரத்தை வீழ்ச்சியை சமாளிக்க முடியாவிட்டால் எதற்கு ஆட்சியில் இருக்கிறீர்கள். கூடிய சீக்கிரம் காங்கிரஸ் இந்தியாவை யாருக்காவது விற்றாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.
Rate this:
Share this comment
Cancel
arun.subramaniyam - LA, Cali,இந்தியா
10-ஜன-201301:00:59 IST Report Abuse
arun.subramaniyam மக்கள் பிழைக்க ஏதும் வழி இருக்கா இறைவா ??
Rate this:
Share this comment
Cancel
bhavani boopathy - Adyar,இந்தியா
10-ஜன-201301:00:40 IST Report Abuse
bhavani boopathy புது நாள் பிறக்கும் போது நமக்கு வயசு ஏறுவது போல தினம் டீசல் ..காஸ். பஸ்... விலைவாசி உயருது.. வருமானம் குறையுது..உழைப்போ கடுமையாய் இருக்கு... ....போராட்டமான வாழ்க்கை..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்