கல்லூரி மாணவர்களிடையே ஏற்படும் மோதல்களை தவிர்க்கும் வகையில், மோதல் நடக்கும் பேருந்து வழித்தடங்களை கண்டறிந்து, பேருந்து கிளம்பும் முனையத்திலிருந்து அவற்றை கண்காணிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
சென்னை கல்லூரி மாணவர்கடையே, பேருந்தை மையமாகக் கொண்டு, தற்போது மோதல்கள் அதிகரித்து வருகின்றன. தற்போது, பேருந்து வழித்தட அடிப்படையில், ஒவ்வொரு மாணவர்களும் தனித்தனி குழுக்களாக பிரிந்து செயல்படுகின்றனர். இவர்கள் மற்ற வழித்தட மாணவர்களை தங்கள் பேருந்தில் வர அனுமதிப்பதில்லை. வேறு கல்லூரி மாணவர்கள் ஏறினாலும், அடிதடியில் ஈடுபடுகின்றனர். கல்வியாண்டு துவங்கியது முதல், 50க்கும் மேற்பட்ட மோதல் சம்பவங்கள் நடந்துள்ளன. இதில், 30க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை மாணவர்களுக்கு, எந்தவித தண்டனையும் வழங்கப்படவில்லை. மாணவர்களின் மோதல் தடுக்கும் வகையில், கல்லூரி கல்வி இயக்குனர் செந்தமிழ் செல்வி தலைமையில், கல்லூரி முதல்வர்கள், போலீஸ் அதிகாரிகள், போக்குவரத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம், பல்லவன் இல்லத்தில் நேற்று நடந்தது. இதில், பச்சையப்பன், நியூ, தியாகராஜர், அம்பேத்கர் சட்ட கல்லூரி, நந்தனம், மாநில கல்லூரி உள்ளிட்ட, 10 கல்லூரிகளை சேர்ந்த முதல்வர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்ததில் நடந்த ஆலோசனை குறித்து, கல்லூரி முதல்வர் ஒருவர் கூறியதாவது: பேருந்துகளை மையமாக கொண்டு, மாணவர்களிடையே ஏற்படும் மோதல்களை தடுக்க, எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதில், மோதல் சம்பவங்கள் நிகழும் பேருந்து வழித்தடங்களை கண்டறிந்து, பேருந்து கிளம்பும் முனையத்திலிருந்து, மாற்றுடையில் போலீசார் மாணவர்களை கண்காணிக்க வேண்டும். வன்முறையில் ஈடுபடும் மாணவர்களின் பட்டியலை தயாரித்து, அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் உள்ளிட்டவை குறித்து விரிவாக விதிக்கப்பட்டது.
எந்தெந்த வழித்தடங்களை மாணவர்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர், மாணவர்களின் எண்ணிக்கைகேற்ப பஸ்களின் எண்ணிக்கை உள்ளதா, தேவைப்படும் சிறப்பு பேருந்துகள் எண்ணிக்கை உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. தேவைப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையும் அரசுக்கு தெரிவிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர்-
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.