Raining continues in southern districts | "தென் மாவட்டங்களில் மழை தொடரும்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

"தென் மாவட்டங்களில் மழை தொடரும்'

Added : ஜன 10, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: "தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில், தென்கடலோர மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக் கூடும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வால், கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தில் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக, வேதாரண்யத்தில் 17 செ.மீ., மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் விடியற்காலையில் கடும் பனிப்பொழிவும், பகலில் வெயிலும் அடித்தன.

இது குறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில், "காற்றழுத்த தாழ்வு காரணமாக, அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தின் தென்கடலோர மாவட்டங்களில் பல இடங்களிலும், வடக்கு உள்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும். சென்னை நகரில் விடியற்காலை லேசான பனிப்பொழிவு நீடிக்கும்' என்றார்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை