விழுப்புரம் : அரசு மானிய உதவியுடன் கறிக்கோழி வளர்க்க உள்ள பயனாளிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது. தமிழக
அரசின் கறிக்கோழிப் பண்ணை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், விழுப்புரம்
மாவட்டத்தில் கோழிப்பண்ணைகள் அமைக்க 230 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
பண்ணை
வைக்க உள்ள பயனாளிகளுக்கு கோழிப்பண்ணை பராமரிப்பு குறித்து பயிற்சி முகாம்
நேற்று துவங்கியது. விழுப்புரத்தில் உள்ள கால்நடை பராமரிப்பு துறை
பயிற்சி மையத்தில் நடந்த பயிற்சி முகாமில் மண்டல இணை இயக்குனர் அழகரசன்
தலைமை தாங்கி, திட்டம் குறித்து விளக்கிப் பேசினார்.
கோட்ட உதவி
இயக்குனர் சுந்தரராஜ், கால்நடை பல்கலை கழக பேராசிரியர் டாக்டர் வேங்கடபதி
ஆகியோர், திட்டத்தின் செயல்பாடுகள் மற்றும் பண்ணைப் பராமரிப்பு குறித்து
விளக்கி பேசினார்.
இந்த திட்டத்தின் கீழ் பயனாளிக்கு 50 சதவீதம் கடன்
தொகையும், மீதமுள்ள 50 சதவீதம் மத்திய, மாநில அரசுகள் மானிய தொகையினை
நபார்டு மூலம் வழங்குகிறது. இந்த திட்டத்தின் கீழ் 3,000 கோழிகள்
வளர்ப்போருக்கு, தலா ஒரு லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் மத்திய, மாநில அரசுகள்
முதலீட்டு மூலதனமாக வழங்குகிறது.
விழுப்புரம் பகுதியில் தேர்வு
செய்யப்பட்டுள்ள 44 பேருக்கு நேற்று முதல் பயிற்சி துவங்கியுள்ளது.
தொடர்ந்து இவர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி வழங்கப்படுகிறது.பண்ணைகள்
துவக்கிய பின் இவர்களுக்கு மானியத்துடன் கூடிய நிதி வழங்கப்பட உள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.