E-paper| Mobile Apps

iPad

iPad E-paper

iPhone

Android

Android Tablet

Windows

Windows 8

Blackberry

bbicon OS 10

Mobile Election

| Get Font | Site Map |  RSS Feed
Advertisement
நிலமோசடி ஆவண பதிவுகளை தடுக்க உரிய நடவடிக்கை : பத்திர பதிவு அமைச்சர் தகவல்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 ஜன
2013
00:18

தஞ்சாவூர்: ""பத்திரப்பதிவுத்துறையில், நிலமோசடி ஆவண பதிவுகளை தடுக்கும் வகையில், கிரய உடன்படிக்கை மற்றும் பொது அதிகார ஆவணங்கள் பதிவு செய்வதில் சட்டதிருத்தம் செய்து, கடந்த டிசம்பர் மாதம் முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது,'' என, தஞ்சையில் வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் ரமணா பேசினார்.
தஞ்சாவூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், தஞ்சை, புதுகை, திருவாரூர், நாகை, கும்பகோணம் பதிவு மாவட்டங்கள் அடங்கிய, மண்டல சார்பதிவாளர்கள் பணி சீராய்வுக்கூட்டம் நேற்று காலை நடந்தது. பதிவுத்துறை தலைவர் தர்மேந்திர பிரதீப் யாதவ், கலெக்டர் பாஸ்கரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் வணிகவரித்துறை மற்றும் பதிவுத்துறை அமைச்சர் ரமணா தலைமை வகித்து பேசியதாவது: கடந்த, 2012 டிச., மாதம் வரை, பதிவுத்துறையின் வருவாய், 5,282 கோடி ரூபாய். இது, முந்தைய ஆண்டு ஈட்டிய வருவாயை விட, 537 கோடியே, 60 லட்சம் ரூபாய் அதிகமாகும். தமிழகத்துக்கு என, தனியாக வகுக்கப்பட்ட முத்திரை சட்ட கருத்துரு அரசின் பரிசீலனையில் தற்போது உள்ளது. பொதுமக்களுக்கு விரைவான, பாதுகாப்பான சேவை வழங்க, ஒருங்கிணைந்த இணையதள மென்பொருள் தயாரிக்க, 117 கோடியே, 34 லட்சம் ரூபாய் நிதியை முதல்வர் ஒதுக்கீடு செய்துள்ளார்.
மேலும், முதல்வரின் உத்தரவுப்படி, சார்பதிவாளர் அலுவலகங்களில், புரோக்கர்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்தவும், முறைகேடு நிகழாதவாறு கண்காணிக்கவும், சார்பதிவாளர் அலுவலகங்களில் காமிரா பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. பதிவுதாரர்களுக்கு தடையற்ற விரைவான சேவை அளிக்க கும்பகோணம், மன்னார்குடி உள்பட, 17 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு, கடந்த ஆண்டு ஜெனரேட்டர் வழங்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக நடப்பாண்டு, 150 சார்பதிவாளர் அலுவலகங்களில், ஜெனரேட்டர் வசதி ஏற்படுத்த, நான்கு கோடியே, 50 லட்சம் ரூபாய் நிதியும், 2011-12ம் ஆண்டு, 52 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சொந்த கட்டிடம் கட்ட, 26 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 17 ஒருங்கிணைந்த பதிவுத்துறை வளாகங்கள், 48 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு சொந்த கட்டிடம் கட்ட, 48 கோடியே, 90 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. வழிகாட்டி மதிப்பில் முரண்பாடு ஏதேனும் இருந்தால், வரும், 15ம் தேதிக்குள் பதிவுத்துறை தலைவருக்கு அனுப்பி, அதை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
நிலமோசடி ஆவண பதிவுகளை தடுக்கும் வகையில், கிரய உடன்படிக்கை மற்றும் பொது அதிகார ஆவணங்கள் பதிவு செய்வதில் சட்டதிருத்தம் செய்து, 2012ம் ஆண்டு டிசம்பர், 1ம் தேதி முதல் அமல்படுத்தவும் அரசு உத்தரவிட்டு, பல்வேறு நடவடிக்கைளை எடுத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.