சட்டசபை வைரவிழா நினைவுத் தூண் அமையும் இடம், புராதனச் சின்னமான, புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து, 11 மீட்டருக்குள் வருவதால், அமைவிடம் மாற்றப்படும் என, தெரிகிறது. வழக்கு சிக்கல் முடிந்து, நினைவுத் தூண் அமைக்க, ஐகோர்ட் அனுமதி வழங்கிய நிலையில், தற்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டசபை, 1952ல் அமைக்கப்
பட்டு, 60 ஆண்டுகள் நிறைவடைந்து, தற்போது வைரவிழாவை கொண்டாடுகிறது.
இதையொட்டி, தலைமைச் செயலகம் அமைந்துள்ள, சென்னை, ராஜாஜி சாலையில், புனித ஜார்ஜ் கோட்டை மற்றும் போர் நினைவுச் சின்னத்திற்கு இடையில், 1.33 கோடி ரூபாய் மதிப்பில், 41 அடி உயரத்தில் அமைக்கப்பட உள்ள, வைரவிழா நினைவு வளைவுக்கு, முதல்வர் ஜெயலலிதா, சமீபத்தில் அடிக்கல் நாட்டினார். பாரம்பரியம் மற்றும் நவீன கட்டடக் கலை
நுட்பத்தை உள்ளடக்கி கட்டப்படும், இந்த நினைவு வளைவு கட்டுமானப் பணியை, நான்கு மாதத்திற்குள் முடிக்க, பொதுப்பணித் துறை அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். இந்நிலையில், குறிப்பிட்ட இடம், புராதன சின்னமான புனித ஜார்ஜ் கோட்டையை ஒட்டி அமைந்திருப்பதால், அந்த இடத்தில் வைரவிழா நினைவுத் தூண் அமைவதற்கு வாய்ப்பில்லை என,
அதிகாரிகள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.ஏனெனில், 2010ல், பழங்கால சின்னங்கள் புராதன தலங்களின் பராமரிப்பில், புதிய சட்ட திருத்தங்கள் கொண்டு வரப்பட்டன. அதன்படி, "புராதன சின்னங்கள் அமைந்துள்ள இடத்திலிருந்து, 100
மீட்டர் தொலைவில், புதிதாக எந்த பணிகளையும் துவங்கக் கூடாது' என, சட்டதிருத்தம் கொண்டு வரப்பட்டது.
தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில், நினைவுச் சின்னங்கள் அமைந்த இடத்திலிருந்து, 100 மீட்டர் வரை தடை
செய்யப்பட்ட பகுதி. இந்த இடத்தில் கட்டடம் கட்டுவதோ, அவற்றை மாற்றி அமைப்பதோ சட்டவிரோதம்.
நினைவுச் சின்னம் அமைந்த இடத்திலிருந்து, 200 மீட்டர் வரை உள்ள இடங்களில், 7 அடியில் மட்டுமே கட்ட அனுமதி வழங்கப்படும்; அதற்கு, மத்திய அரசு அனுமதி வழங்கும்.புராதன சின்னம் அமைந்துள்ள இடங்களுக்கு அருகில், கட்டடம் கட்டுவதற்கு, மாநில தொல்லியல் துறை ஆணையர் அனுமதி வழங்குவதற்கு பரிந்துரை செய்வார்.
அதைப் பெற்றுக் கொண்ட மத்திய அரசு, அது குறித்து விசாரிக்க, இந்திய தொல்லியல் துறை மண்டல கண்காணிப்
பாளருக்கு உத்தரவிடும்.மண்டல கண்காணிப்பாளர் தடையில்லா சான்று வழங்கிய பின்னரே, அங்கு கட்டடம் அமைக்க, மத்திய அரசு அனுமதி வழங்கும். இந்நிலையில், மாநில தொல்லியல்துறை தடையில்லா சான்று வழங்கினாலும், மத்திய தொல்லியல் துறை வழங்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.