வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், முறைகேடுகளை தவிர்க்க, பண பரிமாற்ற நடவடிக்கைகள் அனைத்தையும், "ஆன்-லைனில்' கொண்டு வரும் திட்டம், விரைவில் அமலுக்கு வருகிறது. ஓட்டுனர், நடத்துனர் உரிமங்கள், வாகனங்கள் தகுதி சான்று பெறுதல், வாகனங்கள் பதிவு உள்ளிட்ட சேவைகளுக்காக, வட்டார போக்குவரத்து அலுவலகங்களுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.முன்பதிவு மற்றும் வாகனங்கள் தொடர்புடைய விவரங்களை அறிய, நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, இணைய வழி சேவையை அறிமுகம்
செய்யப்பட்டது.இணைய வழி சேவையை கொண்டு வந்தும், அதிக முறைகேடுகள் நடப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை கட்டுப்படுத்த, நேரடி பண பரிவர்த்தனைகளை முற்றிலும் தடை செய்ய, அரசு திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, போக்குவரத்து துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: சிறிய, பெரிய பண பரிமாற்றங்களால், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் அதிக முறைகேடுகள் நடக்கின்றன. எனவே, அனைத்து விதமான பணப் பரிமாற்ற நடவடிக்கைகளும், "ஆன்-லைன்' மூலமே செலுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதற்காக, தனியார் மற்றும் பொது துறை
வங்கிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். விரைவில், "ஆன்-லைனில்' மூலமே பண பரிவர்த்தனைகள் செய்யும் வசதி அமலுக்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.
-நமது நிருபர்-
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.