சென்னை: தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை துணைவேந்தராக, பேராசிரியர் சந்திரகாந்தா நியமிக்கப்பட்டுள்ளார். இதன் துணைவேந்தராக இருந்த கல்யாணி, 10 மாதங்களுக்கு முன், ஓய்வு பெற்றார். இந்நிலையில், புதிய துணைவேந்தரை தேர்ந்தெடுக்க, சென்னை பல்கலை, முன்னாள் துணைவேந்தர் தியாகராஜன் தலைமையில், குழு அமைக்கப்பட்டது.
உடுமலைப்பேட்டை, ஜி.வி.ஜி., விசாலாட்சி மகளிர் கல்லூரி முதல்வர் மஞ்சுளா, காந்தி கிராம பல்கலை, கணித துறை தலைவர், பாலசுப்ரமணியன் ஆகியோர், குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். முன்னாள் முதல்வர்கள், பேராசிரியர்கள், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள் என, 30க்கும் மேற்பட்டோருக்கு, துணைவேந்தர் பதவிக்கு விண்ணப்பித்தனர். இவர்களிலிருந்து, தகுதியான மூவர் பெயரை, கவர்னருக்கு, தேர்வுக் குழு பரிந்துரைத்தது. இம்மூவரில், புதிய துணைவேந்தராக சந்திரகாந்தாவை, கவர்னர் நியமித்துள்ளார்.
சந்திரகாந்தா ஜெயபாலன், 65, மதுரை மேயர் ராஜன் செல்லப்பாவின் சகோதரி. மதுரையில், பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தவர். எம்.எஸ்சி., விலங்கியல் பட்டம் பெற்று, பிஎச்.டி., பட்டம் முடித்தவர். பழனியில் உள்ள, பழநியாண்டவர் மகளிர் கல்லூரியில், 19 ஆண்டுகள் முதல்வராக பணியாற்றி, ஓய்வு பெற்றவர்.
இவர் கணவர் ஜெயபாலன், கல்லூரி முதல்வராக இருந்து, ஓய்வு பெற்றவர். மதுரை காமராஜர் பல்கலைக் கழக சிண்டிகேட் உறுப்பினராகவும், பொறுப்பு துணைவேந்தராகவும் பணியாற்றி உள்ளார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.