சென்னை: காற்றின் வேகம் குறைந்ததால், காற்றாலைகளால் கிடைத்து வந்த மின் உற்பத்தி, 4 மெகாவாட் அளவிற்கு சரிந்தது. தமிழகத்தில், 4,000 மெகாவாட் மின் பற்றாக்குறை உள்ளது. சென்னை தவிர்த்து, பல மாவட்டங்களில், 14 மணி நேரத்திற்கு மேலாக, மின் தடை உள்ளது. பருவ மழையின்மை உள்ளிட்ட பல காரணங்களால், கடந்த மாதம் இறுதி வரை, 7,000 முதல் 8,000 மெகாவாட் மட்டுமே, மின் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. கடந்த சில நாட்களாக, படிப்படியாக, 9,200 ஆயிரம் மெகாவாட் அளவிற்கு, மின் உற்பத்தி அதிகரித்தது. தென் மாவட்டங்களில், ஓரளவு காற்று வீசியதால், காற்றாலை மின் உற்பத்தியும், 1,176 மெகாவாட் அளவிற்கு உயர்ந்தது. காற்றின் வேகம் குறைந்ததால், காற்றாலைகளால் கிடைத்து வந்த மின் சாரம், நேற்று, 4 மெகாவாட்டாக குறைந்தது. இதனால், நேற்று அதிகாலை நிலவரப்படி, மொத்த மின் உற்பத்தியில், காற்றாலையில் இருந்து, 4 மெகாவாட் மட்டுமே மின்சாரம் கிடைத்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.