Advertisement
ஐ.டி.,யிடம் தப்பிக்க முடியாது: அமிதாப் "வாக்குமூலம்'
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Click the button to move down
Advertisement

மும்பை: ""மரணத்திலிருந்தும், வருமான வரி துறையினரிடம் இருந்தும், தப்பிக்கவே முடியாது,'' என, பாலிவுட் நடிகர், அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார். "கோன் பனேகா குரோர்பதி' டிவி நிகழ்ச்சியை நடத்திய வகையில், 2001 - 02ம் ஆண்டுகளில், வருமான வரி துறைக்கு, நடிகர் அமிதாப் பச்சன், 1.66 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட், நேற்று முன்தினம் உத்தரவிட்டது. இது குறித்து, மும்பையில் நேற்று அமிதாப் பச்சன் கூறியதாவது: வாழ்க்கையில், இரண்டு விஷயங்களை, மனிதர்கள் எதிர்கொண்டே தீர வேண்டும். ஒன்று, மரணம்; மற்றொன்று, வருமான வரி துறை. இந்த இரண்டிலிருந்தும் தப்பிக்கவே முடியாது. நீதிமன்றம் என்ன உத்தரவிட்டுள்ளதோ, அதற்கு நான் கட்டுப்படுவேன். இவ்வாறு அவர் கூறினார். "நீதிமன்ற நடவடிக்கை உங்களுக்கு வருத்தம் அளிக்கிறதா?' என, நிருபர்கள் கேட்டபோது, ""கண்டிப்பாக இல்லை. எப்போதுமே நியாயம் தான் வெல்லும். போபர்ஸ் பீரங்கி பேர ஊழலில், என் பெயர் இழுக்கப்பட்ட போது, என்னிடம் இருந்த ஒரே ஆயுதம், உண்மை மட்டுமே. அது தான், கடைசியில் வெல்லவும் செய்தது. எனவே, அடுத்தவர் மீது குற்றம் சாட்டாமல், நாம் எப்படி இருக்கிறோம் என, சுய பரிசோதனை செய்வது தான் எப்போதும் நல்லது,'' என்றார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bhavani boopathy - Adyar,இந்தியா
10-ஜன-201301:23:49 IST Report Abuse
bhavani boopathy நீங்க பெரிய மனிதர்தான்..
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.