சென்னை: தமிழகம் மற்றும் அரியானா மாநிலங்களில் உள்ள நோக்கியா நிறுவனத்தில், வரிஏய்ப்பு தொடர்பாக, நேற்று முன்தினம் வருமான வரித்துறையினர் ஆய்வு நடத்தியுள்ளனர். பின்லாந்து நாட்டைச் சேர்ந்த நோக்கியா நிறுவனம், தமிழகம் மற்றும் இந்தியாவில் பல இடங்களில், தனது மொபைல் போன் தயாரிப்பு தொழிற்சாலையை நிறுவி வருகிறது. தமிழகத்தில், சென்னை அடுத்த ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள, சிறப்பு பொருளாதார மண்டல பகுதியில் நோக்கியா தொழிற்சாலை அமைந்துள்ளது. நோக்கியா தொழிற்சாலைகளுக்கு, மென் பொருள் வினியோகித்த நிறுவனங்களுக்கு, அதற்கான தொகையை வினியோகிக்கும் போது, கடந்த 2005ம் ஆண்டு முதல், அத்தொகைக்கான வரியை பிடித்தம் செய்யாமல், வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக, வருமான வரித்துறைக்கு தகவல் கிடைத்தது.
இத்தகவலையடுத்து, வருமான வரித்துறையினர், தமிழகத்தில், ஸ்ரீ பெரும்புதூர் தொழிற்சாலை மற்றும் அரியானா மாநிலத்தின், குர்கான் பகுதியில் அமைந்துள்ள, நோக்கியா தொழிற்சாலைகளில், நேற்று முன்தினம், ரெய்டு நடத்தினர்.
அப்போது, வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது. இதற்கான ஆவணங்கள் சிலவும் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பாக, அந்நிறுவன அதிகாரிகளிடமும், விளக்கம் பெற்றனர். ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு, முடிவில் நடவடிக்கை எடுக்கப்படு என்று, வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.