சாகிப்கஞ்ச்: ஜார்கண்ட் மாநிலத்தில், பள்ளி ஆசிரியையை, மூன்று மாணவர்கள், கத்தியால் குத்தி கொன்றனர். சாகிப்கஞ்ச் பகுதியில், தனியார் பள்ளி ஒன்றில், ஆசிரியையாக பணியாற்றியவர், ரீட்டா பிஸ்வாஸ், 57. நேற்று முன்தினம், மாலை, ஆசிரியை தன் வீட்டில் இருந்த போது, கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, கதவை திறந்துள்ளார். வாசலில் நின்றிருந்த மூன்று மாணவர்கள், "டியூஷன் படிக்க வேண்டும்' என, கூறிய படி உள்ளே நுழைந்துள்ளனர். அவர்களிடம் ரீட்டா பேசி கொண்டிருந்த போது, மறைத்து வைத்தி ருந்த கத்தியால், சரமாரியாக குத்தினர். அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த ரீட்டாவின் கணவர், ஆஷிஷ்குமார் பிஸ்வாஸ், 64, தடுக்க முயன்ற போது, கத்தி குத்து காயங்கள் அடைந்தார். கொடூர தாக்குதல் நடத்திய மாணவர்கள் தப்பி ஓடியதும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆசிரியை ரீட்டா இறந்தார். இந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களுக்கும், ஆசிரியைக்கும் இடையே, ஏதேனும் மோதல் இருந்ததா, எதற்காக அவர்கள், ஆசிரியையை கொலை செய்தனர் என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.