பெங்களூரு: பிரிட்டனில் மாயமான பெங்களூருவை சேர்ந்த மாணவரை, மீட்டு தர கோரி, மாணவரின் தாய் கண்ணீர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேற்கு வங்கத்தை சேர்ந்த சவ்விக் பால், 19, என்ற மாணவர், பிரிட்டனின், மான்செஸ்டர் மெட்ரோபாலிடன் பல்கலையில், "புராடக்ட் டிசைனிங்' படிப்பை, மூன்று மாதங்களாக படித்து வந்தார். புத்தாண்டு முதல், அவரை காணவில்லை. நள்ளிரவு விருந்துக்கு சென்ற அவர், இருப்பிடம் திரும்பாததால், உடன் படிப்பவர்கள், போலீசில் புகார் தெரிவித்துள்ளனர். மாணவர் சவ்விக் பாலின் தாய், மஹுயா, நேற்று, பெங்களூருவில், பத்திரிகையாளர்களை சந்தித்து கூறியதாவது: புத்தாண்டு பிறந்தததும், பெங்களூரில் இருந்த எங்களுக்கு போன் செய்து, வாழ்த்து கூறிய எங்கள் மகன், பார்ட்டிக்கு செல்வதாக கூறினான். அதன் பின், அனஜ் என்ன ஆனான் என்பதே தெரியவில்லை. நன்றாக படிக்கும் அவன், பல விருதுகளை பெற்றுள்ளான். யாரிடமும், வம்புக்கு செல்ல மாட்டான். காணாமல் போய்விட்டான் என தெரிந்ததும், என் கணவர், மான்செஸ்டர் சென்றுள்ளார். என் மகனை மீட்டு தர, மேற்கு வங்க முதல்வர், மம்தா, பிரதமர், மன்மோகன் சிங் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த பெண் வேண்டுகோள் விடுத்தார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.