திருவனந்தபுரம்: கேரளாவில், அரசு ஊழியர்களில் ஒரு பிரிவினர் நடத்தி வரும் வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, மார்க்., கம்யூ., மாநில செயலர் பினராயி விஜயனின் மனைவிக்கு, ஆசிரியர் பணி பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. கேரளாவில், வரும் நிதியாண்டில் இருந்து, ஊழியர்கள் பங்களிப்போடு கூடிய புதிய ஓய்வூதிய திட்டத்தை, அரசு அமல்படுத்த உள்ளது. இதற்கு, மார்க்., கம்யூ., - பா.ஜ. கட்சிகள், எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அக்கட்சிகளைச் சேர்ந்த தொழிற்சங்கங்கள் சார்பில், அரசு ஊழியர்கள், காலை வரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில், நேற்று முன்தினம் முதல் ஈடுபட்டு வருகின்றனர். "அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாநில முதல்வர் உம்மன் சாண்டி எச்சரித்திருந்தார். மார்க்., கம்யூ., கட்சி மாநில செயலர் பினராயி விஜயனின் மனைவி கமலா, ஒரு பள்ளியில், "சர்வ சிக்ஷா அபியான்' திட்டத்தின் கீழ், ஆசிரியையாக உள்ளார். இத்திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்கள், போராட்டத்தில் ஈடுபடக் கூடாது; ஈடுபட்டால், வேலை பறிபோகும் என்பது விதி. ஆனால், கமலா, போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், அவருக்கு, வேலை பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.