புதுடில்லி: "கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சி மூலம் வருமானம் ஈட்டியதற்கு, பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், 1.66 கோடி ரூபாய் வரி செலுத்த வேண்டும் என, வருமான வரித் துறை அப்பீல் மனு செய்தது. இதற்கு பதிலளிக்கும்படி, அமிதாப்புக்கு, "நோட்டீஸ்' அனுப்ப சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. தனியார் "டிவி' ஒன்றில், பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், "கோன் பனேகா குரோர்பதி' நிகழ்ச்சியை நடத்தினார். இதன் மூலம் ஈட்டிய வருவாய்க்கு, வருமான வரியை முறைப்படி செலுத்தவில்லை. வருமான வரித் துறை, மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதற்கு, அமிதாப் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ஈட்டிய மொத்த வருமானம், 50.92 கோடி ரூபாய்க்கு, 30 சதவீத விலக்கு அனுமதி உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தார். இருப்பினும், அமிதாப், 1.66 கோடி ரூபாய் செலுத்த வேண்டும் வருமான வரித் துறை வாதிட்டது. வருமான வரித் துறையின் மனுவை, மும்பை ஐகோர்ட் கடந்தாண்டு, பிப்., 29 ல் டிஸ்மிஸ் செய்தது. இந்நிலையில், இந்த உத்தரவை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் வருமான வரித் துறை அப்பீல் செய்தது. இந்த மனு, நேற்று, நீதிபதிகள் டி.கே.ஜெயின் மற்றும் மதன் பி லோகுர் ஆகியோர் அடங்கிய "பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தது. வருமான வரித் துறையின் மனுவுக்கு பதிலளிக்கும்படி, அமிதாப் பச்சனுக்கு "நோட்டீஸ்' அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.