திருநெல்வேலி: நெல்லை கோர்ட் அருகே ஆள் மாறாட்டத்தில் நடந்த கொலைதொடர்பாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி, வி.எம்.சத்திரத்தை சேர்ந்தவர் ஏ.எஸ்.ராஜ் 39. மாநகராட்சி தி.மு.க.,கவுன்சிலர் ஒருவரிடம் கார் டிரைவராக இருந்தார். சில மாதங்களுக்கு முன்பு அந்த பணியில் இருந்து விலகினார். கடந்த டிச.,31ல் மாலையில்
மோட்டார் சைக்கிளில் நண்பருடன் கோர்ட் கட்டடம் அருகே சென்றுகொண்டிருந்த போது, ஒரு கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் துப்புதுலங்காமல் போலீசார் குழப்பத்தில் இருந்தனர். நெல்லையை அடுத்துள்ள முன்னீர்பள்ளத்தில் பட்டன் என்பவர் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். கொலை வழக்கில் கைதான ஹோண்டா மாரியப்பன் என்பவர் தினமும் நெல்லை கோர்ட்டில் ஆஜராகி வந்தார். கடந்த 31ம் தேதி மாலையில் கோர்ட்டில் அவர் இருப்பதை அறிந்த கொலையாளிகள், அவரை கொலை செய்ய கோர்ட்டுக்கு வெளியே சற்று தொலைவில் காத்திருந்தனர்.
ஆனால் மாரியப்பன் கோர்ட்டில் இருந்து பின்புற வழியா க மோட்டார் சைக்கிளில் சென்றுவிட்டார். மாரியப்பனை கொலை செய்ய கோர்ட் ரோட்டில் ஒரு பள்ளி அருகே மாலை கும்மிருட்டில் காத்திருந்த கும்பலிடம், கோர்ட் வாசலில் மாரியப்பனை கண்காணித்துக்கொண்டிருந்த நபர், மொபைல் போனில், "மாரியப்பன் கிளம்பிட்டான்...' என தகவல் தெரிவித்துள்ளார்.
மாரியப்பன் வெள்ளைசட்டை அணிந்திருந்தார் என்பது மட்டுமே தகவலாக கொண்டிருந்த கூலியாட்கள்,
அப்போது பைக்கில்வெள்ளை சட்டையணிந்து வந்த ராஜை சரமாரியாக வெட்டினர். அப்போதுதான் கோர்ட்டில் உளவு பார்த்துக்கொண்டிருந்த நபர், மாரியப்பன் வேறுவழியாக சென்றுவிட்டான் என்ற தகவல் சொல்ல மொபைலில் அழைத்துள்ளார். ஆனால் கொலையாளிகள் அந்த போனுக்கு பதிலளிக்காததால், ஆள்மாறாட்டத்தில் ராஜ் கொலை செய்யப்பட்டார். கொலை செய்யப்பட்ட ராஜூ உடன் பைக்கில் வந்தவர் கொடுத்த தகவலின்படி கொலையாளிகள் தேடப்பட்டனர். இதுதொடர்பாக முன்னீர்பள்ளத்தில் கொலை செய்யப்பட்ட பட்டனின் சகோதரர்கள் கோபி, ராதாகிருஷ்ணன்,
மருமகன் நம்பிராஜன், சட்டக்கல்லூரியில் பயிலும் சீனிவாசபெருமாள், கூலிக்கு கொலை செய்யும் ஜேசுராஜ், வைகுண்டம்,மற்றும் சுரேஷ், மகராஜா, வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் கைது செ ய்யப்பட்டனர். இருவர் சரணடைந்தனர்.
நெல்லையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்வார்குறிச்சி அருகே சப் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல்,
கடந்த ஆண்டு தச்சநல்லூரில் பால்வியாபாரி சுப்பு, கடந்த மாதம் மூன்றடைப்பில் டிரைவர் ஒருவர் என
ஆள்மாறாட்டத்தில் கொலை செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.