சென்னை: தர்மபுரி மாவட்டம், நத்தம் காலனியில் நடந்த கலவரம் குறித்து, சி.பி.ஐ., விசாரிக்க வேண்டும் என, கலவரத்தில், பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் அவர்கள் நேற்று கூறியதாவது: குழந்தைகளின் மனதில், கலவரம் குறித்த பீதி, இன்னும் அடங்கவில்லை. கலவரம் குறித்த பயம், குழந்தைகள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது. கலவரத்தை பார்த்து பீதி அடைந்தவர்களுக்கு, "கவுன்சிலிங்' வழங்குவோம் என, அரசு அறிவித்தது. ஆனால், இன்று வரை அமல்படுத்தவில்லை. தொடர்ந்து நாங்கள் மிரட்டப்படுகிறோம்; பெண்கள் வெளியே செல்வதற்கு பயப்படுகின்றனர்; குழந்தைகளும் பள்ளிக்கு செல்வதற்கு பயப்படுகின்றனர். குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. காதல் திருமணத்தை காரணம் காட்டி, திட்டமிட்டே கலரவத்தை நடத்தி உள்ளனர். தற்போது நடந்து வரும், சி.பி.சி.ஐ.டி., விசாரணையில், எங்களுக்கு நம்பிக்கை இல்லை. எனவே, சி.பி.ஐ. விசாரிக்க விசாரித்தால் மட்டுமே, இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.