வார்சா: போலந்தில், மொபைல் போன் நிறுவனம் ஒன்று, ரஷ்ய கம்யூனிஸ்ட் தலைவர், லெனினின் கார்ட்டூன் படத்தை, தன் விளம்பரத்திற்காக பயன்படுத்தியதற்கு, அந்நாட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. போலந்தில் உள்ள, "போல்ஸ்கா பெலிபோனியா சைப்ரோவா' என்ற, மொபைல் போன் நிறுவனம், தன் வாடிக்கையாளர்களுக்கு, "குறைந்த செலவில் பேசும் வசதி கிடைக்கும், பேசுங்கள்' என்ற தன் விளம்பரத்தில், ரஷ்ய கம்யூனிஸ்ட் தலைவர் லெனினின் கார்ட்டூனை பயன்படுத்தி, "டிவி'யிலும், போஸ்டர் மூலமும் விளம்பரப்படுத்தியது. இதற்கு, போலந்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இரண்டாம் உலகப் போருக்குப் பின், போலந்து மக்களின் விருப்பத்திற்கு மாறாக, சோவியத் ரஷ்யாவால், கம்யூனிசம் திணிக்கப்பட்டது என்ற கருத்து நிலவுகிறது. கம்யூனிஸ்ட்களின் ஆட்சியில் நடைபெற்ற குற்ற செயல்களை, புலனாய்வு செய்யும், தேசிய அமைப்பின் இயக்குனர், லுகாஸ் காமின்ஸ்கி, மொபைல் போன் நிறுவனத்திற்கு வெளிப்படையாக எழுதியுள்ள கடிதத்தில், "இந்த, 20ம் நூண்றாண்டின் மிகப் பெரிய "கிரிமினல்'களில் லெனினும் ஒருவர். இந்த விளம்பரம், இளைஞர்களை நேரடியாக சென்று சேருவதால், லெனின் மேல் அவர்களுக்கு வேறு விதமான அபிப்ராயம் ஏற்படும்' என, தெரிவித்து உள்ளார். அது போல், லெனின் கார்ட்டூனுக்கு எதிராக, மொபைல் போன் நிறுவனத்திற்கு, 1,000க்கும் மேற்பட்ட கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. இதையடுத்து, லெனினின் கார்ட்டூனை நீக்க, சம்பந்தப்பட்ட மொபைல் போன் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.