ஆஸ்டின்: அமெரிக்க பள்ளிகளில், மாணவர்களின் நடமாட்டத்தை கண்டறிய, அடையாள அட்டையில் பொருத்தப்பட்டுள்ள, "மைக்ரோ சிப்' நடைமுறைக்கு, கோர்ட் ஒப்புதல் அளித்துள்ளது. அமெரிக்காவின், சில மாகாணங்களில் உள்ள பள்ளிகளில், அடையாள அட்டையில், "மைக்ரோ சிப்' பொருத்தப்பட்டு, ஜி.பி.எஸ்., தொழில்நுட்ப முறைப்படி, மாணவர்களின் நடமாட்டம் கண்காணிக்கப்படுகிறது. வகுப்புகள் துவங்குவதற்கு முன்னும், மணி அடித்த பிறகும், வராத மாணவர்கள் எங்கிருக்கின்றனர் என்பதை அறிந்து, அதற்கேற்ப, அவர்களது வருகை பதிவேட்டில், "பிரசன்ட்' அல்லது, "ஆப்சென்ட்' போடப்படுகிறது. கடந்த, 2005ம் ஆண்டே, கலிபோர்னியா மற்றும் ஹூஸ்டன் மாகாணங்களில், இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், கடும் எதிர்ப்பால், இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. ஆனால், டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பள்ளிகளில், இந்த திட்டம் தற்போது நடைமுறையில் உள்ளது. மாணவர்கள் கழிப்பறையில் இருந்தாலும், அவர்கள் சாப்பிடும் மதிய உணவில், என்னென்ன பதார்த்தங்கள் உள்ளன என்பதெல்லாம், "மைக்ரோ சிப்' மூலம் அறிந்து கொள்ள முடிகிறது. "இந்த நடைமுறையினால், எங்கள் தனிமை பாதிக்கப்படுகிறது' என, ஆன்ட்ரியா என்ற மாணவி, கோர்ட்டில் மனு செய்துள்ளார். "பள்ளி நிர்வாகத்தின் இந்த நடைமுறை, கிறிஸ்துவ மதப்படி தவறானது' என, ஆன்ட்ரியாவின் பெற்றோரும், கோர்ட்டில் தெரிவித்துள்ளனர். இது குறித்து பள்ளி நிர்வாகத்தினர் குறிப்பிடுகையில், "அடையாள அட்டையில் நாங்கள் பொருத்தியுள்ள, "மைக்ரோ சிப்' பள்ளி வளாகத்துக்குள் தான் வேலை செய்யும். ஆன்ட்ரியா சொல்வது போல, கழிப்பறையில் கூட, இந்த, "மைக்ரோ சிப்' சிஸ்டம் வேலை செய்வது சங்கடமாக இருந்தால், அடையாள அட்டையை கழற்றி வைத்துச் செல்லலாம்' என்றனர். இந்த மனுவை விசாரித்த டெக்சாஸ் கோர்ட் நீதிபதி ஆர்லேண்டோ கார்சியா, தீர்ப்பில் கூறுகையில், ""பள்ளியில், நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள, "மைக்ரோசிப்' அடையாள அட்டையை அனைத்து மாணவர்களும் அணிந்து வரும் போது, ஆன்ட்ரியா மட்டும் எதிர்ப்பது ஏற்க முடியாது. இந்த நடைமுறையை ஆன்ட்ரியா பின்பற்றாவிட்டால், அவளை, பள்ளியிலிருந்து, நீக்க நிர்வாகத்துக்கு உரிமை உண்டு,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.