திருப்புவனம்: திருப்புவனம் நரிக்குடி ரோட்டிலுள்ள டாஸ்மாக் "பாருக்கு',பேரூராட்சி ஆழ்துளை கிணறு மூலம் முறைகேடாக குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பேரூராட்சி ஆழ்துளை கிணற்றிலிருந்து முறைகேடாக பல வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் வரியும் வசூலாகாமல் முடங்கி உள்ளது. பல ஆண்டாக தொடரும் இம்முறைகேட்டால் பேரூராட்சிக்கு ரூ.62 லட்சம் வரை பாக்கி இருப்பதாக கணக்கு எடுக்கப்பட்டுள்ளது. உண்மையான குடிநீர் இணைப்புகளின் எண்ணிக்கையை அறிய, மாவட்டத்தின் மற்ற பேரூராட்சி பணியாளர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், 15 வது வார்டு, நரிக்குடி ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாருக்கு, சில ஆண்டாக குடிநீர் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது."பாருக்கு' கொடுத்த முறைகேடு இணைப்பு மட்டும் துண்டிக்கப்படவில்லை. இதனை இயக்கும் மோட்டார் சாவியும் "பார்' ஏலதாரர் வசமே உள்ளதால், நள்ளிரவில் கடைகளை கழுவதற்கும் இத்தண்ணீரை பயன்படுத்துகின்றனர். வார்டு மக்கள் மோட்டாரை இயக்க முடியாமல் குடிநீர் பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.அதிகாரிகளுக்கு பலமுறை இப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
பேரூராட்சி நிர்வாக அதிகாரி அமானுல்லா கூறுகையில், ""முறைகேடாகத்தான் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.நாளை (இன்று) இணைப்பை துண்டித்து விடுகிறோம்,'' என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.