Advertisement
பாகிஸ்தானில் சீக்கியர் தலை துண்டித்து கொலை
Advertisement
 
 
Advertisement
 
எழுத்தின் அளவு:
Advertisement

பதிவு செய்த நாள்

10 ஜன
2013
00:27

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், சீக்கியர் ஒருவர், பயங்கரவாதிகளால் தலை துண்டித்து கொல்லப்பட்டுள்ளார். பாகிஸ்தானின் கைபர் பகுதியில் உள்ள, சகாகெல் பஜாரில், மூலிகை கடை நடத்தி வந்தவர், மொகிந்தர் சிங்,40. கடந்த ஆண்டு, நவம்பரில், ஆயுதங்களுடன் வந்த மர்ம ஆசாமிகள், இவரை கடத்தி சென்றனர். இதற்கிடையே, நேற்று முன்தினம் இவரது உடல், தலை துண்டிக்கப்பட்ட நிலையில், மார்க்கெட் அருகே, வீசப்பட்டு கிடந்தது. இவரது கொலைக்கு, தாவீத் உல்-இஸ்லாம் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த அமைப்பின் எதிரியான, லஷ்கர் இ -இஸ்லாமுக்காக, மொகிந்தர் சிங், உளவு பார்த்ததால் கொல்லப்பட்டதாக, இவரது உடல் அருகே கிடந்த குறிப்பில், எழுதப்பட்டுள்ளது.
இது குறித்து, மொகிந்தர் சிங்கின் சகோதரர், தஸ்வந்த் சிங் கூறியதாவது: என் சகோதரை பற்றி தாவீத் உல் இஸ்லாம் அமைப்பிடம் விசாரித்த போது, அவர்கள், "தெரியாது' என, கூறினர். இப்போது அந்த அமைப்பினர், இவரை கொன்றுள்ளனர். மொகிந்தர் சிங்குக்கு, ஒன்பது குழந்தைகள் உள்ளனர். இதில் ஒரு குழந்தை, மாற்றுத் திறனாளியாக உள்ளது. எனவே, இந்த குடும்பத்துக்கு அரசு நிவாரண உதவி வழங்க வேண்டும். இவ்வாறு தஸ்வந்த் சிங் கூறினார்.




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.