கோலாலம்பூர்: மலேசியாவில், கோர்ட்டுக்கு அழைத்து செல்லப்பட்ட, ஏழு கைதிகள், போலீசாரின் கண்களில் மிளகாய் பொடியை தூவி, தப்பித்து சென்றனர். மலேசியாவின், பினாங்க் பகுதியை சேர்ந்த, ஒன்பது கிரிமினல் குற்றவாளிகள், உள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவதற்காக, நேற்று முன்தினம் அழைத்து வரப்பட்டனர். போலீஸ் வாகனத்தில் அழைத்து வரப்பட்ட இந்த கைதிகள், தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டனர். சோதனை சாவடி அருகே, போலீசார், வாகனத்தின் பின் கதவை திறந்த போது, கைதிகளில் ஒருவன், தான் வைத்திருந்த மிளகாய் பொடியை, போலீசாரின் கண்களில் தூவினான். இதனால், போலீசார் தடுமாற்றமடைந்தனர். இதை பயன்படுத்தி, ஏழு கைதிகள் தப்பி ஓடி விட்டனர். தப்பி ஓடிய கைதிகளை, போலீசார், ஹெலிகாப்டர் மூலம் தேடி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.