சிங்கப்பூர்: சிங்கப்பூரில், புத்தாண்டு அன்று, நண்பரை கொன்ற வழக்கில், மேலும் ஒரு தமிழர், கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூருக்கு, தொழில் நிமித்தமாக சென்ற, தமிழகத்தை சேர்ந்த, ராமசாமி ராபின்ஹுட், 25, முருகானந்தம், 32, ராஜா அருள், 22, விஜயகுமார், 26, பழனிகுமார், 24, உள்ளிட்டோர், புத்தாண்டு அன்று, ஜுராங் லேக்பார்க் பகுதியில், மது அருந்தினர். திடீரென, இவர்களுக்குள் சண்டை மூண்டது. ஒருவரையொருவர் தாக்கி கொண்டனர். இதில் பலத்த காயம் அடைந்த பழனிகுமார், மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி, மறுநாள் இறந்தார். இதையடுத்து, இவர் நண்பர்கள், நான்கு பேர் மீது, கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களைக் கைது செய்தனர். இந்த கொலையில் சம்பந்தப்பட்ட இளையராஜா, 29, என்ற மற்றொரு நபரை, போலீசார் நேற்று கைது செய்து, விசாரித்து வருகின்றனர். இவர்கள் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிக பட்சமாக மரண தண்டனை வழங்கப்படும்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.