திருப்புத்தூர்: சிவகங்கை மாவட்டம்,வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் பகுதியை, மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையினர்" இகோ சென்சிடிவ் ஏரியா' வாக அறிவித்துள்ளதால்,அப்பகுதியில், 5 கி.மீ சுற்றளவில் சுற்றுச்சூழலை பாதுகாக்க கமிட்டிக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. வனப்பகுதி அழிக்கப்படுவதை அடுத்து, கடந்த 1989ம் ஆண்டு முதல், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையினர் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986ன் படி வனவிலங்கு சரணாலயம்,தேசிய பூங்காக்கள் உள்ள பகுதியில்
"இகோ சென்சிடிவ் ஏரியா' அதாவது, சுற்றுச்சூழலை கட்டாயமாக பாதுகாக்க வேண்டிய பகுதியாக அறிவித்தது. இப்பகுதியில் 10 கி.மீ.,சுற்றளவில் சுற்றுச்சூழலை பாதுகாக்க பல கட்டுப்பாடுகளை அறிவித்தது. மரம் வெட்டுதல், வெடி மருந்து பயன்படுத்துதல், வாகனத்தால் ஒலி,ஒளி,புகை மாசுபடுதல்,வேகமான பயணம், இரவில் போக்குவரத்து, கூடுதல் உயரத்திற்கு கட்டடம் கட்டுதல், மின்,மொபைல் டவர் அமைத்தல், செங்கல் சூளை, அடுப்புக் கரி மூட்டம், இயந்திரங்களைப் பயன்படுத்துதல், மாசு ஏற்படும் தொழில்கள், பாலித்தீன் பயன்பாடு, ரியல் எஸ்டேட், மரம் வெட்டுதல் போன்றவற்றிற்கு தடை உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் உள்ள கொள்ளுகுடி பார்வையாளர் மையத்தில் நடந்த குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கண்டவற்றை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.