Advertisement
ரசாயன உயிர்கொல்லி அருந்திய இளைஞர் காப்பாற்றினர் அரசு மருத்துவமனை டாக்டர்கள்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2013,00:30 IST

சென்னை: ரசாயன உயிர்க்கொல்லியை குடித்து, உயிருக்கு போராடிய இளைஞரை, அரசு மருத்துவமனை மருத்துவர்கள் காப்பாற்றி உள்ளனர். சென்னை, நெற்குன்றம் பகுதியை சேர்ந்த, 21 வயது இளைஞர் ஒருவர், ரசாயன உயிர்கொல்லியை குடித்து, தற்கொலைக்கு முயன்றார். உயிருக்கு ஆபத்தான நிலையில், சென்னை, ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவரை, மருத்துவர்கள் காப்பாற்றி உள்ளனர்.

இதுகுறித்து, மருத்துவமனையின் இரைப்பை, குடல் அறுவை சிகிச்சை துறை தலைவர் சந்திரமோகன் கூறியதாவது: ஏ.சி., - குளிர்சாதன பெட்டிகளுக்கு பயன்படுத்தப்படும், "ஐசோசைனேட்', "பாலிஆயில்' ஆகிய ரசாயனங்களை குடித்ததால் வயிறு மற்றும் நெஞ்சுவலியுடன், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனையில், அவர் உட்கொண்ட ரசாயனங்கள், அவரது உணவு குழாய் மற்றும் இரைப்பை பகுதியில், கட்டியாக மாறி தங்கியிருந்தது தெரியவந்தது. நச்சு நீக்கியியல் துறை மருத்துவர்களுடன் இணைந்து, உணவு குழாயில், "எண்டோஸ்கோப்பி' முறையிலும், இரைப்பை பகுதியில், அறுவை சிகிச்சை மூலமும், 200 கிராம் அளவு, பந்து போல் இருந்த ரசாயன பொருளை அகற்றினோம். தற்போது அவர் நலமாக உள்ளார். இவ்வாறு சந்திரமோகன் கூறினார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.