தமிழக அரசின் புள்ளியியல் மற்றும் பொருளியல் துறையில் உள்ள பதவிகள் மாற்றப்படுகின்றன. துணை இயக்குனர் பதவிக்கான அந்தஸ்தை, இணை இயக்குனர் நிலையில் மாற்றியமைக்கவும்; மூன்று மண்டலத்தை, ஆறு மண்டலமாக பிரிக்கவும் அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், மக்கள் தொகை கணக்கெடுப்பை தவிர, கால்நடைகள், பயிர்சாகுபடி, தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட கணக்கெடுப்பு பணிகள், ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் வளர்ச்சி பணிகள் பற்றிய தகவல் உள்ளிட்டவற்றை, புள்ளியியல் மற்றும் பொருளியியல் துறை அதிகாரிகள் சேகரித்து, மத்திய, மாநில அரசுக்கு அனுப்பி வருகின்றனர். தமிழகத்தில், சென்னை, மதுரை, சேலம் ஆகிய மாவட்டங்களை தலைமையிடமாகக் கொண்டு, புள்ளியியல் துறை மண்டல அலுவலகம் செயல்படுகிறது. மூன்று மண்டலமாக இருப்பது, ஆறு மண்டலங்களாக மாற்றியமைக்கப் படுகின்றன. எந்தெந்த மாவட்டங்களை, தலைமையிடமாகக் கொண்டு செயல்படுத்தலாம் எனவும், அரசு ஆலோசித்து வருகிறது. மண்டலத்துக்கு தலைமை அதிகாரியாக, துணை இயக்குனர் பதவி தற்போது உள்ளது. அந்த பதவியை, மற்ற துறையில் உள்ளது போல், இணை இயக்குனர் அந்தஸ்துக்கும், மாவட்டத்துக்கு உதவி இயக்குனர் நிலையில் உள்ள அதிகாரி, துணை இயக்குனராகவும் மாற்றப்பட உள்ளனர். அதே போன்று, வருவாய் கோட்டத்தின் அடிப்படையில் உள்ள பதவியிடம், இனி, உதவி இயக்குனராக மாற்றப்படுகிறது. ஒவ்வொரு ஒன்றிய அளவிலும் உள்ள புள்ளியியல் ஆய்வாளர் பதவியிடத்தில், எவ்வித மாறுதலுமின்றி தொடர்ந்து அதே நிலையில் நீடிக்கும் என, தமிழக அரசு அறிவித்துள்ளதாக, சேலம் மண்டல புள்ளியியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நமது நிருபர் -
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.