சென்னை: ஆதார் அடையாள அட்டையை, பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கான இருப்பிட மற்றும் அடையாள சான்றாக பயன்படுத்தலாம் என, சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கான சான்றிதழ்கள் சரிபார்ப்பின்போது, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், ரேஷன் அட்டை போன்றவை, இருப்பிட மற்றும் அடையாள சான்றுகளாக எடுத்துக் கொள்ளப்படுகின்றன.
இவற்றுடன் தற்போது, ஆதார் அடையாள அட்டையையும், பாஸ்போர்ட் விண்ணப்பத்திற்கான இருப்பிட மற்றும் அடையாள சான்றாக பயன்படுத்தலாம் என, வெளியுறவுத் துறை அமைச்சம் அறிவித்துள்ளது. சாதாரண மற்றும் தத்கல் முறை விண்ணப்பங்களுக்கு, இந்த அறிவிப்பு பொருந்தும். சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலகம் இத்தகவலை தெரிவித்துள்ளது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.