திருநெல்வேலி: இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு, நெல்லை பல்கலை சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத்தின், 20வது பட்டமளிப்பு விழா, வரும், 11ம் தேதி வெள்ளிக்கிழமை, நெல்லை அபிசேகபட்டியில் உள்ள பல்கலை வளாகத்தில் நடக்கிறது.
இது குறித்து பல்கலை துணைவேந்தர் ஏ.கே.குமரகுரு கூறியதாவது: பட்டமளிப்பு விழாவிற்கு, கவர்னரும், பல்கலைகளின் வேந்தருமான, ரோசையா தலைமை வகிக்கிறார். இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகத்தின், முதன்மை கட்டுப்பாட்டு அதிகாரி, விஞ்ஞானி சிவதாணுப்பிள்ளை பட்டமளிப்பு உரை நிகழ்த்துகிறார். தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் சிறப்புரையாற்றுகிறார். தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை இயற்றியவர் மனோன்மணியம் சுந்தரனார். அந்த பாடலுக்கு இசையமைத்தவர், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.