தேனி: ஊராட்சி செயலாளருக்கான பணிவிதிகளை உருவாக்கி, நடைமுறைப்படுத்த அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து ஊராட்சி தலைவர்களின் தன்னிச்சையான போக்கிற்கு அரசு "செக்' வைக்கிறது. தமிழகத்தில் 12 ஆயிரத்து 524 ஊராட்சிகள் உள்ளன. அனைத்து ஊராட்சிகளிலும் ஊராட்சி செயலாளர்கள் உள்ளனர். இவர்களை தலைவர்கள் ஆட்டிப்படைத்து வருகின்றனர். தலைவர்கள் நினைத்தால் ஊராட்சி செயலாளர்களை பதவி நீக்கம் செய்யலாம், என்ற நிலை உள்ளது. எனவே பல ஊராட்சிகளில் தலைவர்கள், பணியில் உள்ள செயலாளர்களை நீக்கி விட்டு, தங்களது உறவினர்களை பணி நியமனம் செய்து, தங்கள் விருப்பம் போல் செயல்பட்டு வருகின்றனர். தலைவர்களின், இந்த நடவடிக்கைகளுக்கு கடிவாளம் போட வேண்டும். ஊராட்சி செயலாளர்களுக்கு பணிவிதிகள், விடுமுறை, சம்பள நிர்ணயம், யாருடைய கட்டுப்பாட்டில் செயல்பட வேண்டும், தவறு செய்தால் என்னென்ன நடவடிக்கைகள் எடுப்பது, சஸ்பெண்ட் செய்யும் அதிகாரம் யாருக்கு, டிஸ்மிஸ் செய்யும் அதிகாரம் யாருக்கு, எந்த அடிப்படையில் பணி நியமனம் அமைய வேண்டும், என்பது உட்பட பல விதிகளை உருவாக்கி ஊராட்சி நிர்வாகத்தை சீரமைக்க வேண்டும், என தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தியது. இதையடுத்து ஊரக வளர்ச்சித்துறை அரசு செயலாளர் சங்கரை, அலுவலர்கள் சங்க மாநில தலைவர் சுப்பிரமணி, பொதுச்செயலாளர் சேகர், துணைத்தலைவர் கிருஷ்ணசாமி உட்பட 14 பேர் சந்தித்து கோரிக்கைகள் குறித்து பேசினர்.
மாநில துணைத்தலைவர் கிருஷ்ணசாமி கூறியதாவது: அரசு செயலாளருடன் நடத்திய பேச்சுவார்த்தையின் போது, ஊராட்சி செயலாளர்களுக்கான பணிவிதிகளை உருவாக்குதல், பி.டி.ஓ.,க்கள், ஒன்றிய பணி மேற்பார்வையாளர்கள், சாலை ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு, சம்பள சீரமைப்பு செய்தல், காலிப்பணியிடங்களை நிரப்புதல் உட்பட 16 கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு விரைவில் நடைமுறைப்படுத்த உள்ளதாக உறுதியளித்தார். உயர் அதிகாரிகளின் நெருக்கடிகளில் இருந்து அலுவலர்களை பாதுகாப்பது தொடர்பான வரைமுறைகளை உருவாக்கவும், அரசு சம்மதம் தெரிவித்துள்ளது என்றார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.