சேலம்: சேலம் வனத்துறை அலுவலகத்தில், இன்று சந்தனக்கட்டை ஏலம் நடக்கிறது. சேலம், அஸ்தம்பட்டி தெற்கு வனச்சரக அலுவலக வளாகத்தில், சந்தன மரக்கட்டைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. மூன்று மாதத்துக்கு ஒருமுறை, சந்தன கட்டை ஏலம் நடக்கும். கடந்தாண்டு, ஒருமுறை மட்டுமே ஏலம் நடந்தது. ஏலத்தொகை அதிகமாக இருந்ததால், வியாபாரிகள் பங்கேற்கவில்லை. இந்தாண்டுக்கான சந்தனக்கட்டை ஏலம் இன்று காலை, 11 மணிக்கு அஸ்தம்பட்டி வனச்சரக அலுவலக வளாகத்தில் நடக்கிறது.
சேலம் மாவட்ட வன அலுவலர் தங்கராஜ் கூறியதாவது: சேலத்தில் ஏலம் விடப்படும் சந்தனக் கட்டைகள் மிகவும் தரம் வாய்ந்தது. டில்லி, பெங்களூரு, திருவனந்தபுரம், சென்னையில் இருந்து, வியாபாரிகள் சந்தனக் கட்டைகளை வாங்க வருவர். இந்தாண்டு ஏலம் இன்று துவங்குகிறது. ஜஜ்போக்கல், அயன்சில்டா, மில்வா சில்டா, சந்தன மரத்தூள், பசலோ பக்னி போன்ற உயர்தர சந்தனக் கட்டைகளின் வகைகள் ஏலம் விடப்படுகின்றன. இங்குள்ள குடோனில், 400 டன் சந்தனக் கட்டைகள் உள்ளன. 100 டன் சந்தனக்கட்டை ஏலம் போகும், என எதிர்பார்க்கிறோம். சென்னை கூடுதல் முதன்மை தலைமை வனபாதுகாவலர் வினோத்குமார் தலைமையில், சந்தனக்கட்டை ஏலம் நடக்கிறது. சேலம் மண்டல வன பாதுகாவலர் கணேசன் முன்னிலை வகிக்கிறார். ஏலம் நடக்காத நாட்களிலும், சில நிறுவனங்கள், இங்கு வந்து ஆர்டர் செய்து சந்தனக் கட்டைகளை பெற்று செல்கின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.