Advertisement
காவிரியில் சாயக்கழிவு கலப்பு: 10 சாயப்பட்டறைகள் அகற்றம்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Bookmark and Share  
ஆல்பம்
பதிவு செய்த நாள் : ஜனவரி 10,2013,00:36 IST

ஈரோடு: காவிரி ஆற்றில், சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவு நீரை கலக்கச் செய்த, 10 சாயப்பட்டறைகளை, மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள், நேற்று இடித்து அகற்றினர். ஈரோடு, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் உள்ள தோல் தொழிற்சாலை, அனுமதியின்றி செயல்படும் சாயப்பட்டறைகள், கழிவுநீரை காவிரியில் கலக்கச் செய்து மாசுபடுத்துகின்றனர்.
நேற்று காலை, ஈரோடு மாவட்ட சுற்றுச்சுழல் பறக்கும்படை பொறியாளர் தலைமையிலான தனிப்படை மற்றும் நாமக்கல் மாவட்டம் சுற்றுச்சூழல் பொறியாளர் தலைமையில், உதவி பொறியாளர்கள் இணைந்து, பள்ளிபாளையம், திருச்செங்கோடு ரோடு உள்ளிட்ட பகுதிகளில், அனுமதியின்றி செயல்பட்ட சாயப்பட்டறைகளை இடித்து அகற்றினர்.

நாமக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் முருகன் கூறியதாவது: காவிரி ஆற்றில் வருகிற தண்ணீர், ஈரோடு, நாமக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின், குடிநீர் ஆதாரமாக உள்ளது. ஈரோடு, நாமக்கல் பகுதியில் அனுமதியின்றி செயல்படும் சாயப்பட்டறைகள், கழிவு நீரை நேரடியாக ஆற்றில் கலக்கச் செய்கிறது. இதுபோன்ற சாயப்பட்டறைகளை கண்காணித்து, இடித்து வருகிறோம். நேற்று, இப்பகுதியிலுள்ள, 10 சாயப்பட்டறைகள் இடிக்கப்பட்டன. அனுமதியின்றி செயல்படும் சாயப்பட்டறைகள் தொடர்ந்து இடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.




வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.

1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
( OR )Login with
New to Dinamalar ?

வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

அன்புள்ள வாசகர்களே!,

நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.