நிலக்கோட்டை: நிலக்கோட்டையில் கிடை மாடு கூட்டத்தினம் மீது மணல் லாரி புகுந்ததில், 10 மாடுகள் பலியாகின. மாடுகளை ஓட்டிச் சென்ற கார்த்தியும் உயிரிழந்தார். திண்டுக்கல் மாவட்டம் பட்டிவீரன்பட்டி அருகே எம்.வாடிப்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்த வெள்ளைச்சாமி மகன் கார்த்தி, 17. கிடை மாடுகள் வளர்த்து வருகிறார். பட்டிவீரன்பட்டி பகுதியில் தீவன பற்றாக்குறை உள்ளதால், மேய்ச்சலுக்காக மதுரை மாவட்டத்திற்கு மாடுகளை ஓட்டிச்சென்றுள்ளார். நேற்று காலை, 6:30 மணியளவில் நிலக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்தபோது, வேகமாக வந்த மணல் லாரி சென்றுள்ளது. எதிர்திசையில் பஸ்வந்ததால், லாரி ரோட்டோரம் சென்ற மாடுகள் கூட்டத்தில் புகுந்தது. இதில் சம்பவ இடத்திலேயே 10 மாடுகள் பலியாகின.
மாடுகளின் உரிமையாளரான கார்த்தி, படுகாயமடைந்த நிலையில் நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். டிரைவர் முத்துப்பாண்டி லாரியுடன் நிலக்கோட்டை போலீஸ் ஸ்டேஷனில் சரணடைந்தார்.
விபத்திற்கான காரணம்: அணைப்பட்டி வைகை ஆற்றில், இரவு முழுவதும் மணல் கடத்தல் தொடர்ந்து நடக்கிறது. வருவாய் துறையினர், போலீசார் மணல் கடத்தலை கண்டு கொள்ளாமல் அவர்களுக்கு சாதகமாக நடந்து கொள்கின்றனர்.
விடிவதற்குள் நிலக்கோட்டையை கடந்து விட வேண்டும் என்ற காரணத்தால், மணல் லாரிகள் அசுர வேகத்தில் செல்கின்றன. இதனால் விபத்துக்கள் ஏற்படுகிறது. மணல் லாரி ஏற்படுத்தும் விபத்துக்களை அதிகாரிகள் மூடி மறைத்து விடுகின்றனர்.
நேற்று நடந்த விபத்திலும், மணல் கடத்தலை மறைக்க போலீசார் முயன்றனர். பொதுமக்களின் வற்புறுத்தலால், மணல் கடத்தல் வழக்கும் பதிவு செய்யப்பட்டது.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.