Strike affects rs.150 crore worth business | தொழிற்பேட்டைகள் ஸ்டிரைக் : ஓசூரில் ரூ.150 கோடி வர்த்தகம் பாதிப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தொழிற்பேட்டைகள் ஸ்டிரைக் : ஓசூரில் ரூ.150 கோடி வர்த்தகம் பாதிப்பு

Added : ஜன 10, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

ஓசூர்: ஓசூர் சிப்காட், சிட்கோ தொழிற்பேட்டை சிறு, குறு தொழிற்சாலைகள், நேற்று முன்தினம் ஒரு நாள், "பந்த்' போராட்டத்தில் ஈடுபட்டதால், 150 கோடி ரூபாய் உற்பத்தி மற்றும் வர்த்தகம் பாதிக்கப்பட்டது. ஓசூர் சிப்காட்-1, சிப்காட்-2 மற்றும் சிட்கோவில், 3,000த்துக்கும் மேற்பட்ட சிறு, குறு தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் பெரிய தொழிற்சாலைகளில் உற்பத்தியாகும் கனரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்களுக்கு தேவையான உதிரிபாகங்கள், வீட்டு உபயோக பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வகை பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதன் மூலம், 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெற்று வருகின்றனர்.
தமிழகம் முழுவதும் நீடிக்கும் மின் பற்றாக்குறையால், ஓசூர் பகுதியில் தினமும், 12 மணி நேரம் மின்தடை ஏற்படுகிறது. இதனால், சிறு, குறு தொழிற்சாலைகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. ஜெனரேட்டர்களை வைத்து உற்பத்தி செய்தால், கூடுதல் உற்பத்தி செலவு ஏற்பட்டு நஷ்டம் ஏற்பட்டது. அதிருப்தியடைந்த சிறு, குறு தொழிற்சாலைகள் சங்கத்தினர் தொடர் மின்தடையை கண்டித்தும், உற்பத்தி செய்யும் மின்சாரத்தை தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கு பகிர்ந்து வழங்க வலியுறுத்தியும், நேற்று முன்தினம் ஒருநாள் தொழிற்சாலைகளை பூட்டி கதவடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தையொட்டி சிறு, குறு தொழிற்சாலைகளில் முற்றிலும் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால், நேற்று ஒரே நாளில் மட்டும், சிறு, குறு தொழிற்சாலைகளில், 150 கோடி ரூபாய் உற்பத்தி பாதிக்கப்பட்டது.

வீடுகளுக்கு தடையில்லை : சேலம் மாவட்டம், மேட்டூர் சிட்கோ தொழிற்கூடத்தில் மெக்னீசியம் சல்பைட் உரதயாரிப்பு ஆலை, பி.வி.சி., பைப் ஆலை உள்பட, 160 சிறு தொழிற்கூடங்கள் உள்ளன. ஸ்டிரைக் காரணமாக நேற்று முன்தினம்,மேட்டூர் சிட்கோ வளாகத்தில் சிறுதொழில் நிறுவனங்கள் மூடப்பட்டதால், 60 லட்சம் ரூபாய் மதிப்புள்ள உற்பத்தி பாதித்தது.
ஸ்டிரைக் நடந்ததால், அதனால் கிடைத்த உபரிமின்சாரத்தால், சேலம் ,அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வீடுகளுக்கு நேற்று பகலில் மின்தடை தளர்த்தப்பட்டு, தடையில்லா மின்சாரம் வழங்கப்பட்டது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை