Nurse student raped by pastor | குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து நட்சத்திர ஓட்டலில் கற்பழித்த பாதிரியார் : போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செவிலியர் மாணவி புகார்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து நட்சத்திர ஓட்டலில் கற்பழித்த பாதிரியார் : போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் செவிலியர் மாணவி புகார்

Added : ஜன 10, 2013
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement
Advertisement

சென்னை: ""குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, நட்சத்திர ஓட்டலில், பல முறை நெருக்கம் கொண்டு, திருமணம் செய்ய மறுக்கும் பாதிரியார் மற்றும் கொலை மிரட்டல் விடுக்கும் அவரது தம்பி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என, செவிலியர் பட்டப்படிப்பு மாணவி, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

அதன் விவரம்: என் சொந்த ஊர் விழுப்புரம் அடுத்த கெடார் செல்லக்குப்பம். பெற்றோர், விவசாய கூலிகள். போரூரில் உள்ள மருத்துவ கல்லூரியில், செவிலியர் பட்டப்படிப்பு படிக்கிறேன். அங்குள்ள மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தேன். அப்போது, கிட்னி அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த, வியாசர்பாடி சர்மா நகரை சேர்ந்த லூர்து மேரி என்பவருடன், பழக்கம் ஏற்பட்டது. அவரது வீட்டுக்குச் சென்று மருந்து, மாத்திரைகள் கொடுத்து வந்தேன். அப்போது, லூர்து மேரியின் தங்கை மகன் அந்தோணி ஜோசப், தன் இரு சக்கர வாகனத்தில் போரூரில் கொண்டு வந்து வீடுவார்.
பாதிரியார் வேடம் துறப்பேன் மூலக்கடையில் உள்ள தேவாலயத்தில், பாதிரியாராக இருக்கும் அந்தோணி ஜோசப், என்னை காதலிப்பதாக தெரிவித்தார். நீங்கள் எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும் என கேட்டேன். "உனக்காக இந்த பாதிரியார் பதவியை துறப்பேன்' என்றார். "அழகாக இருக்கிறாய்; திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால், தற்கொலை செய்து கொள்வேன்' என, மிரட்டல் விடுப்பார். ஒரு நாள், வலுக்கட்டாயமாக மூணாறுக்கு அழைத்துச் சென்று, நட்சத்திர ஓட்டலில், திருமணம் செய்து கொள்வதாக தலையில் சத்தியம் செய்து, குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து, நெருக்கம் கொண்டார். பாதிரியார் என்று தான் நம்பி வந்தேன்; என் வாழ்க்கையை சீரழித்து விட்டீர்களே என, கதறினேன்.
"கட்டாயம் உன்னை திருமணம் செய்து கொள்வேன். இல்லையென்றால், உயிரை மாய்த்து கொள்வேன்' என, மீண்டும், மீண்டும் சத்தியம் செய்தார். "சென்னைக்கு சென்றதும், இந்த பாதிரியார் வேடத்தை தூக்கி எறிந்து விடுவேன்' என்றார். அதன் பின், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில், டாலர் பொருத்தப்பட்ட தாலியை கட்டினார்.
கிண்டியில் உள்ள ஜென் கார்டலில், ஒரு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாயை கட்டி, கணவன், மனைவி என, உறுப்பினராக்கினார். அங்கு பல முறை நெருக்கம் கொண்டார். அதுபோல், அவர் பணியாற்றி வரும் மூலக்கடை தேவாலயத்தில் உள்ள அறையிலும், வலுக்கட்டாயமாக நெருக்கம் கொண்டார்.
இவரது செக்ஸ் வெறியால், மூன்று முறை கர்ப்பமடைந்தேன். "வெளியில் சொன்னால் உனக்குத் தான் அவமானம்; கருவை கலைத்து விடுவோம்' என்றார். அவர் பாதிரியார் வேடத்தில் இருக்கும் மனித மிருகம். அவரை நம்பி மூன்று முறை கரு கலைப்புக்கு சம்மதித்தேன். அனைத்திற்கும் அவர் தான் பணம் கொடுத்தார்.
கொலை மிரட்டல்
இந்நிலையில், மீண்டும் நெருக்கம் கொள்ள அழைத்தார். கருக்கலைப்பு செய்வதே வேலையாக இருந்தால், என் உடல் நிலை என்ன ஆவது. பெற்றோரிடம் சொல்லப்போகிறேன் என தெரிவித்தேன். அதற்கு அவர், "எவனிடமாவது சொல்லிக் கொள்' என, மிரட்டினார். சில நாட்கள் கழித்து, "பெற்றோரை, எழும்பூர் அசோகா ஓட்டலுக்கு அழைத்து வா, என் பெற்றோருடன் பேசவைத்து திருமணம் செய்து கொள்கிறேன்' என்றார்.
அங்கு சென்ற போது, பாதிரியார் அந்தோணி ஜோசப்பின் தம்பி ஹென்றியும் அவரது கூட்டாளிகள் மட்டுமே இருந்தனர். அவர்கள், "நடந்ததை வெளியில் சொன்னால், கொலை செய்துவிடுவோம்' என, மிரட்டினர். மேலும், பிரபல தனியார் தொலைக்காட்சியில் வேலை பார்க்கிறேன். உன்னை பல்வேறு வழக்குகளில் சிக்க வைத்து உள்ளே தள்ளிவிடுவேன் என்றார். என் வாழ்க்கையை சீரழித்த பாதிரியார் ஜோசப், கொலை மிரட்டல் விடுத்த, அவரது தம்பி ஹென்றி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவிக்கப் பட்டு உள்ளது. இந்த புகார் மனு, விசாரணைக்காக, புளியந்தோப்பு போலீஸ் துணை கமிஷனருக்கு அனுப்பி வைக்கப் பட்டு உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை