சென்னை: தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட, சண்முகையா பாண்டியன், அறிவுரைக்கழகத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பரமக்குடி அருகே, பாம்பு விழுந்தான் கிராமத்தில், தேவர் பூஜையின் போது நடந்த கொலை சம்பவம் தொடர்பாக, கடந்த மாதம் தேவர்குல கூட்டமைப்பு தலைவர் சண்முகையா பாண்டியன், தேசியபாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் அடைக்கப்பட்டார். தேசிய பாதுகாப்பு சட்டம், குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ், ஒருவரை கைது செய்தால், சட்டப்படி அமைக்கப்பட்டுள்ள, அறிவுரை கழகம் முன், அவரை ஆஜர்படுத்த வேண்டும். அறிவுரை கழகத்தில், ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதிகள், உறுப்பினர்களாக இருப்பர். அறிவுரை கழகத்தின் விசாரணைக்குப் பின், அவரை கைது செய்தது சரி என்றால், அரசின் உத்தரவை உறுதி செய்தும், சரியில்லை என்றால், ரத்து செய்தும், உத்தரவிடப்படும். தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட, சண்முகையா பாண்டியனை, திருச்சி போலீசார், சென்னை கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள, அறிவுரை கழகம் முன், நேற்று ஆஜர்படுத்தினர். விசாரணைக்குப் பின், அவர் மீண்டும் திருச்சிக்கு கொண்டு செல்லப்பட்டார்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.