வால்பாறை: வால்பாறையில், வாக்கிங் சென்றவர்கள், ஒரே நேரத்தில் மூன்று சிறுத்தைகளை பார்த்த அதிர்ச்சியில், ஓட்டம் பிடித்தனர். கோவை மாவட்டம், வால்பாறை நகரில் வசிக்கும் பலர், புதுத்தோட்டம், சவராங்காடு, சிறுகுன்றா எஸ்டேட் வரை, தினமும் காலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். நேற்று காலை, 6.00 மணியளவில், புதுத்தோட்டம் - சவராங்காடு எஸ்டேட் பகுதிக்கு இடையே, நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த சிலர், அங்குள்ள தேயிலை தோட்டப் பகுதியில், சலசலப்பு கேட்டு பார்த்தனர். மூன்று சிறுத்தைகள், காட்டுப்பன்றி ஒன்றை கொன்று தின்று கொண்டிருந்ததை கண்ட அவர்கள், அதிர்ச்சியில் உறைந்தனர்; ஒரே நேரத்தில் மூன்று சிறுத்தைகளை கண்டதால், அங்கிருந்து அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
இத்தகவல் அறிந்த மக்கள், அப்பகுதிக்கு வர அஞ்சினர். தேயிலை தோட்ட தொழிலாளர்களும், தோட்ட வேலைகளை விட்டு தப்பியோடினர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.